5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திமாபெரும் தமிழர் பேரணி!
நாள்: செப்டம்பர் 24
நாள்: செப்டம்பர் 24
பேரணி தொடங்கும் இடம்:
இராஜரத்தினம் விளையாட்டரங்கம் எதிரில், எழும்பூர், சென்னை
நேரம்: மாலை சரியாக 3 மணி
இராஜரத்தினம் விளையாட்டரங்கம் எதிரில், எழும்பூர், சென்னை
நேரம்: மாலை சரியாக 3 மணி
பேரணி நிறைவடையும் இடம்:
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் மாளிகை எதிரில்,
எழும்பூர், சென்னை.
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் மாளிகை எதிரில்,
எழும்பூர், சென்னை.
மத்திய அரசை வலியுறுத்தும் 5 அம்ச கோரிக்கைகள்
1. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்காதே!
2. இந்திய அரசே! ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்!
2. இந்திய அரசே! ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்!
3. சிங்களப் படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து!. வங்கக் கடலில் பாரம்பரிய மீன்பிடியை மீட்டுக் கொடு!
4. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூடு! இரட்டைக் குடியுரிமை வழங்கு!
5. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான பொருளாதாரத் தடையை இந்திய அரசே முழுமையாக செயல்படுத்து!
சாதி, மத, கட்சிகள், இயக்கங்கள் கடந்து
தமிழராய் தலைநகரில் ஒன்றிணைவோம்!
தமிழர் வாழ்வுரிமை மீட்போம்!
தமிழராய் தலைநகரில் ஒன்றிணைவோம்!
தமிழர் வாழ்வுரிமை மீட்போம்!
அன்புடன் அழைக்கிறது
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு
1. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேசஅனுமதிக்காதே!
- இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் பன்னாட்டுப் புலனாய்வு குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
- ஐ.நா.வின் இந்த குழுவை விசாரணைக்காக இலங்கைக்குள் ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என்று மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது.
- சர்வதேச நாடுகளின் உச்ச அமைப்பான ஐ.நாவின் அதிகாரப்பூர்வ புலனாய்வுக் குழுவையே அனுமதிக்க முடியாது என்று இறுமாப்புடன் பேசி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை, அதே ஐ.நா. அவையின் பொதுச்சபையில் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார்.
- ஐ.நா. பொதுச்சபையில் ராஜபக்சேவை உரையாற்ற அனுமதித்தால் ஐ.நா. மீதான நம்பகத்தன்மை என்பது கேள்விக் குறியாகும்.
- மேலும் ராஜபக்சேவை ஐ.நா. அவையில் உரையாற்ற அனுமதித்தால் ஈழத்தில் நடந்தேறிய போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. புலனாய்வுக் குழுவின் செயல்பாடும் முடங்கும்.
- இது தமிழ்ச் சமூகத்துக்கு சர்வதேச சமூக இழக்கும் மாபெரும் அநீதி. இதனால்தான் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
2. இந்திய அரசே! ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக்குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கானநடவடிக்கை மேற்கொள்!
- ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் அமைத்திருக்கும் பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
- இதற்கு மாற்றாக சிங்களப் பேரினவாத அரசின் போர் ஒடுக்குமுறையில் இருந்து தப்பி லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழகத்தில் பன்னாட்டுப் புலனாய்வுக் குழு விசாரணையை நடத்த வேண்டும்.
- இலங்கையில் யுத்தம் வெடித்த காலம் 2009 முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்த காலம் மட்டுமின்றி. அதன் பின்னரும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஏதிலிகளாக தமிழ்நாட்டில் அடைக்கலமாகி உள்ளனர்.
- அவர்களிடம் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன.
- இலங்கையின் போர்க்குற்றங்களுக்கான நேரடி சாட்சியங்களாக தமிழ்நாட்டு ஈழத் தமிழ் ஏதிலிகள் இருக்கின்றனர்.
- இதனால் இந்தியாவில் உள்ள ஈழத் தமிழரிடம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும்.
- இதற்காக ஐ.நா. புலனாய்வுக் குழுவுக்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்குவதுடன் இந்த விசாரணைக்கான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்..
3. சிங்களப் படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்துநிறுத்து!. வங்கக் கடலில் பாரம்பரிய மீன்பிடியை மீட்டுக் கொடு!
- 1974, 1976 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவு, தமிழ்நாட்டு மக்களின் இசைவின்றி இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது முதல் வங்கக் கடல் தமிழக கடல் தொழிலாளர்களான மீனவர்களின் குருதியால் செங்கடலாகிப் போய்விட்டது.
- 700 தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது சிங்கள அரசு. பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
- உலகத்திலேயே மீன்பிடிக்கச் சென்றதற்காக இத்தனை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரே கடல் வங்கக் கடல் மட்டுமே.
- இன்றும் கூட நாள்தோறும் சிங்களக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதும் சிறைபிடிப்பதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.
- மேலும் தமிழக மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரமான படகுகளையும் தற்போது பறிமுதல் செய்து வைத்துக் கொண்டு அதனை விடுவிக்கவே மாட்டோம் என்று கொக்கரிக்கிறான் ராஜபக்சே.
சிங்களப் படையால் தமிழர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுவதை தட்டிக் கேட்டு நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அத்துடன் வங்கக் கடலில் தமிழக மீனவர்களின் ஆயிரமாயிரம் ஆண்டுகால பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி தமிழர் விரோத "கச்சத்தீவு ஒப்பந்தத்தை" ரத்து செய்து மீட்க வேண்டும் என்பது மட்டுமே. இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனே செய்ய வேண்டும்.
4. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூடு!இரட்டைக் குடியுரிமை வழங்கு!
- இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத இனப்படுகொலை அடக்குமுறைகளால் சொத்து, சுகம், வாழ்வுரிமை என அனைத்தையும் இழந்து ஏதுமற்ற ஏதிலிகளாய் உயிரைப் பணயம் வைத்து தாய் தமிழ்நாட்டு மண்ணுக்கு வந்தவர்கள்தான் நம் ஈழத் தமிழ் உறவுகள்.
- இந்த தமிழர்கள் ஏதோ ஆடு மாடுகளைப் போல அகதிகள் முகாம்கள், சிறப்பு அகதிகள் முகாம்கள் என்ற பெயரிலே அடைபட்டு வதைபட்டு வருகின்றனர்.
- அதுவும் கொடுஞ்சிறைகளைவிட கொடூரமானதாக இருப்பவை சிறப்பு அகதிகள் முகாம்.
- இதே இந்தியாவில் திபெத்தில் இருந்து வந்த அகதிகள் ஒரு தனிநாட்டுக்கு உரித்தான அத்தனை உரிமைகளுடனும் வசதிகளுடனும் வாழ்கின்றனர்.
- ஆனால் 8 கோடித் தமிழ் மக்களின் உறவுகள் சிறைக் கைதிகளை விட மிக மோசமாக நடத்தப்படுகின்றனர்.
- திபெத் அகதிகளுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளும் ஏதிலிகளாக வந்த ஈழத் தமிழ் உறவுகளுக்கு உண்டு.
- ஆகையால் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர் அகதிகள் முகாம்கள், சிறப்பு முகாம்களை இழுத்து மூடிட வேண்டும்.
- ஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியக் குடியுரிமையும் வழங்கி இரட்டைக் குடி உரிமை பெற்றவர்களாக வாழ வேண்டும்.
5. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டுநிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான பொருளாதாரத் தடையை இந்தியஅரசே முழுமையாக செயல்படுத்து!
- இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கை அரசு மீது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் ' இலங்கை மீதான பொருளாதாரத் தடை விதிப்பு".
- ஆனால் தமிழ்நாடு அங்கம் வகிக்கும் இந்திய மத்திய அரசு இந்த தீர்மானத்தை உதாசீனப்படுத்திவிட்டு இலங்கையுடன் அனைத்து வகையான பொருளாதார உறவுகளையும் முன்னெடுக்கிறது.
- இலங்கைக்கு ரூ500 கோடி நிதி உதவி அளிப்பதாக மத்திய நிதி நிலை அறிக்கையிலே தெரிவிக்கிறது.
- இந்த மாற்றாந்தாய் போக்கை மத்திய அரசு கைவிட்டு இலங்கை மீதான பொருளாதாரத் தடை கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
- ஈழத் தமிழரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சாதி, மத, கட்சிகள், இயக்கங்கள் கடந்து
தமிழராய் தலைநகரில் ஒன்றிணைவோம்!
தமிழர் வாழ்வுரிமை மீட்போம்!
தமிழராய் தலைநகரில் ஒன்றிணைவோம்!
தமிழர் வாழ்வுரிமை மீட்போம்!
அன்புடன் அழைக்கிறது
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு
No comments:
Post a Comment