கடும் இனவாத அடக்குமுறைகளினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களிற்கு தமிழ் மக்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையினிலும் அவர்கள் மீதான இனவாத தாக்குதல்களினை கண்டித்தும் எதிர்வரும் 29ம் திகதி யாழ்ப்பாணத்திலும் கண்டன
ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. இப்போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பினதும் ஆதரவையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.
யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டினில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வறிவிப்பினை விடுத்திருந்தார். அவருடன பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் பிரச்சன்னமாகியிருந்தார்.
இப்போராட்டத்திற்கு ஆதரவுகோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் பேசியதாகவும் அதேகருத்தினை அவர்களும் கொண்டிருந்ததையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுக்க சம்மதித்திருகின்றார்.
கடந்தகால மனக்கசப்புக்களை மறந்து புதிய ஆரம்பமொன்றை நோக்கிப்போவதே நல்லதென தெரிவித்த அவர் முஸ்லீம்களும் தற்போது மனமாற்றமொன்றை அடைந்திருப்பார்களென நம்புவதாக அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினில் தெரிவித்தார்.
அதேபோன்று முஸ்லீம் காங்கிரஸ் வேறு முஸ்லீம் மக்கள் வேறென தெரிவித்த அவர் தனது இருப்பிற்காக முஸ்லீம் காங்கிரஸ் தலைமை மக்களிடமிருந்து விலகிச்செல்வதாகவும் தெரிவித்தார்.
முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை தமிழ்த் தேசிய முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தப் போராட்டம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் அமைப்புக்கள், தலைவர்களையும் உள்வாங்கிய நிலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அது ஒரு உதிரியான செல்பாடுகள் அல்ல தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கடந்து அறுபத்தைந்த ஆண்டகளாக இத்தகைய நடவடிக்கைகள், தாக்கதல்களுக்கு உள்ளாகி வந்துள்ளார்கள்.
நாம் தமிழ் தேசிய முன்னனியை உருவாக்கிய வேளையிலேயே முஸ்லீம் மக்கள் சம்பந்தமான கருத்தை மிகவும் தெளிவாக வெளியிட்டுள்ளோம் கூறியும் உள்ளோம்.
தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைந்த செயல்படவேண்டியது அவசியமாகும் தமிழ் இனத்தின் முள்ளந்தண்டை முள்ளிவாயக்காலில் உடைத்த நிலையில் அடுத்த கட்டமாக சிங்களதேசம் திட்டமிட்ட முறையில் முஸ்லீம் மக்களையும் அழிக்கும் எனபதைத் தெட்டத் தெளிவாக கூறியுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் நன்கு திட்டமிட்ட முறையில் தமிழ் முஸ்லீம் மக்களுக்க எதிரான நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலும் அரசாங்க ஒட்டுக் குழுக்களினாலும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கிழக்கு மாகாணத்தில் நன்கு திட்டமிட்ட முறையில் தமிழ் முஸ்லீம் மக்களுக்க எதிரான நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலும் அரசாங்க ஒட்டுக் குழுக்களினாலும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு குழப்பங்களை உருவாக்க தமிழ் முஸ்லீம் மக்களை ஒரு இனத்திற்;கு எதிராக மற்றைய இனத்தை பயன்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கமும் அரசாங்கத்துடன் இனைந்த செயல்படும் ஒட்டுக் குழுக்களும் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றன.
இதேவேளை வடபுலத்தில் தமிழ் மக்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் அரசாங்கம் முஸ்லீம் மக்களைப் பயன்படுத்தி குழப்பங்களை உண்டாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டும்; வருகின்றது.
1983ம் ஆண்டு தென்னிலங்கையில் தமிழ் மக்கள் ஆதிக்கம் செலுத்திய பொருளாதாரத்தை அழித்தது போன்று இன்று முஸ்லீம் மக்கள் தென்னிலங்கையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார நடவடிக்கைகளை அழிக்கும் செயல்பாடுகளும் அரசாங்கத்தினால் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
இதனை நாம் வெறுமனே ஒரு சில பேரினவாதிகளின் செயற்பாடாக கருதி இத்தகைய செயற்பாடுகளை நாம் மறந்துவிடும் நிலமை பிழையானதாகும். நாம் கற்றுக்கொண்ட பாடங்களை மறந்துவிடாது ஒரு பொது வேலைத்திட்டத்தின்கீழ் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்த தீவை ஒரு சிங்கள பேரினவாத நாடாக மாறவிடாது பொது வேலைத்திட்டத்தி கீழு சிங்கள முற்போக்க சக்திகளையும் இணைத்த செயல்பட வேண்டிய தேவையும் காலகட்டமும் இதுவாகும்.
இந்த தீவை ஒரு சிங்கள பேரினவாத நாடாக மாறவிடாது பொது வேலைத்திட்டத்தி கீழு சிங்கள முற்போக்க சக்திகளையும் இணைத்த செயல்பட வேண்டிய தேவையும் காலகட்டமும் இதுவாகும்.
No comments:
Post a Comment