August 3, 2016

முள்ளிவாய்க்காலில் மக்கள் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது நிலஅளவீடு!

முல்லைத்தீவு முள்ளிவாய்கால் கிழக்கில் நில அளவை மேற்கொள்ளவதற்கு சென்ற நில அளவையாளர்கள் மக்களின் எதிர்ப்பை அடுத்து திரும்பிச்சென்றுள்ளனர்.


முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படையினருக்கு வழங்குமாறு தெரிவித்து நில அளவை மேற்கொள்ள இன்று காலை குறித்த பகுதிக்கு நில அளவையாளர்கள் சென்றிருந்தனர்.

இதனை தொடர்ந்து வட்டுவாகல் பாலத்தை அண்மித்த இரண்டு பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை மவாட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் நேரில் வருகைதந்து, இனிமேல் காணி அளவீடு மேற்கொள்ள அனுமதி வழங்கபோவதில்லை என உறுதி மொழி தரவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சாந்தினி ஸ்ரீஸ்கந்தராசா, மற்றும் வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன், வடமாகாணசபை உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், துரைராசா ரவிகரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஆதரவு வழங்கிவருகின்றனர்.




No comments:

Post a Comment