யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட வீடுகளில் இருந்தும் விடுதிகளில் இருந்தும் சேகரிக்கப்படும் கழிவுநீரைப் பரிகரிப்பதற்குரிய நிலையத்துக்கான அடிக்கல் காக்கைதீவில் இன்று திங்கட்கிழமை (22.08.2016) நாட்டப்பட்டுள்ளது.
ரூபா 18.5 மில்லியன் செலவில் அமையவுள்ள இக்கழிவுநீர் பரிகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல்லை வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக நாட்டி வைத்துள்ளார்.
யாழ் மாநகரசபையின் எல்லைக்கு உட்பட்ட 23 வட்டாரங்களில் இருந்தும் கழிவுநீர்த்தாங்கிகளின் மூலம் எடுத்து வரப்படும் கழிவுநீர் இதுவரையில் கல்லுண்டாய்ப் பகுதியில் உரிய முறையில் பரிகரிக்கப்படாமலேயே கழிக்கப்பட்டு வந்தது. இதற்குரிய பரிகரிப்பு இயந்திர வசதி மாநகரசபையில் இல்லாததே இதற்கான காரணமாக அமைந்தது. பலரும் இதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியதையடுத்தே யாழ் மாநகரசபையினது நிதியிலிருந்தும் உள்ளுராட்சி அமைச்சின் மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தற்போது கழிவுநீர்ப் பரிகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
தற்போது 30 ஆயிரம் லீற்றர் வரையான கழிவுநீரே யாழ் மாநகரசபைக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படுகிறது. எதிர்காலத்தில் சுற்றுலா காரணமாக விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 50 ஆயிரம் லீற்றர் கழிவுநீரைப் பரிகரிக்கக்கூடிய வகையிலேயே இந்நிலையம் அமைக்கப்படவுள்ளது.
கழிவுநீர் பரிகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பின்னர் வெளியேறும் நீர் இந்நிலையம் அமையவுள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் தென்னந்தோட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும், திண்மப்பொருட்கள் சேதனப்பசளைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் அமையவுள்ள இந்நிலையத்தின் கட்டுமானப்பணிகள் நான்கு மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், யாழ் மாநகரசபைப் பொறியியலாளர் இ.சுரேஷ்குமார், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் அ.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.
வடக்கு விவசாய அமைச்சின் சூழலியல் விவசாயத்தை நோக்கி...நல்லூர் உற்சவகாலக் கண்காட்சி இன்று ஆரம்பம்:
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் 'சூழலியல் விவசாயத்தை நோக்கி...' என்னும் தொனிப்பொருளிலான கண்காட்சி இன்று திங்கட்கிழமை (22.08.2016) ஆரம்பமாக உள்ளது. நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் இக்கண்காட்சி ஆலய வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.
இக்கண்காட்சி இன்று திங்கட்கிழமை (22.08.2016) பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
வடக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விவசாயம் அதிக அளவிற்கு செயற்கை உரங்களையும் செயற்கைப் பீடைகொல்லிகளையும் பயன்படுத்தும் செறிவு வேளாண்மை ஆகும். இந்த இரசாயனங்கள் உணவின் மூலம் உடலை அடைந்து கேடுகளை விளைவிப்பதோடு, நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி வருகிறது. இவற்றைத் தடுப்பதற்கு நஞ்சுகளைப் பயன்படுத்தாத உணவு உற்பத்தி முறையை நோக்கி நாம் மீளவும் நகர வேண்டி உள்ளது. இது தொடர்பாகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி விவசாய இரசாயனங்களுக்கு மாற்றீடாக சேதனப் பசளைகள் மற்றும் இயற்கை முறையிலான பீடைகொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே 'சூழலியல் விவசாயத்தை நோக்கி...' என்னும் தொனிப்பொருளில் வடக்கு விவசாய அமைச்சு ஆண்டுதோறும் இக்கண்காட்சியை நடாத்திவருகிறது.
இக்கண்காட்சியில் வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றின் காட்சிக்கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, நடுகைப் பொருட்கள், சுதேச உணவுப்பொருட்கள் மற்றும் இயற்கைப் பழரசமென்பானங்கள் ஆகியவற்றின் விற்பனை மையங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் பார்வையாளர்களிடையே விவசாயம்; தொடர்பான வினாக்கள் கேட்கப்பட்டு சரியாக விடையளிப்போருக்குப் பயன்தரும் மரக்கன்றுகளும் தினமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
22.08.2016 ஆரம்பமாகும் இக்கண்காட்சி பூங்காவனத் திருவிழா நடைபெறும் 02.09.2016 வரை தினமும் பிற்பகல் 2 மணியில் இருந்து 8 மணிவரை நடைபெறவுள்ளது. விசேட திருவிழா நாட்களான தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவனத் திருவிழா நாட்களில் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 8 மணிவரையும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment