August 22, 2016

புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய குற்றசாட்டில்   கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள பெண்ணின் விளக்கமறியலை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் நீடித்துள்ளார்.


ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில்  நீதவான் இ. சபேசன்  முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள பெண் மன்றில் முன்னிலை ஆக்கப்பட்டார்.


அதனையடுத்து கடந்த வழக்கு தவணையின் போது சமர்ப்பிக்க பட்ட எழுத்து மூல  பிணை விண்ணப்பத்திற்கான கட்டளை  அடுத்த வழக்கு தவணையின் போது பிறப்பிக்கப்படும் என தெரிவித்து வழக்கினை 29ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அதேவேளை குறித்த வழக்கில் கைது செய்யபட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மகாலிங்கம் தவநிதி எனும் பெண் சிறைசாலையில் உயிரிழந்தார். இவர் மாணவி கொலை வழக்கின் சந்தேக நபரான சுவிஸ் குமார் என்பவரின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மற்றைய பெண்ணின் வழக்கே நடைபெற்று வருகின்றது.

No comments:

Post a Comment