August 11, 2016

தொடரும் உண்ணாவிரத போராட்டம்! கூட்டமைப்புக்கு எச்சரிக்கை!

வடக்கு பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தைப் பகுதியில் அமைக்க வலியுறுத்தி இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இரவும் தொடர்கிறது.


தா.மகேஸ்வரன் என்ற 73 வயதுடைய முதியவரே இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவருடன், வடமாகாண முதலமைச்சர் சார்பாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா வருகைத் தந்து கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன், மூன்று நாள் கால அவகாசமும் கோரியிருந்தார். எனினும், அது வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவரை வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, இ.இந்திரராஜா ஆகியோரும் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியிருந்தனர்.
2010ஆம் ஆண்டு வட மாகாகணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு ஓமந்தையில் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஜனநாயக ரீதியாக வாக்களித்து அதிகபட்சமாக 21 உறுப்பினர்கள் ஓமந்தை பிரதேசத்தினையே தெரிவு செய்துள்ளனர்.

விவசாய மக்களின் விருப்பமும் அதுவே. எனவே இதனை உணர்ந்து ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான உத்தரவாதம் தரும் வரை தனது போராட்டம் தொடரும் என தா.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகேஸ்வரனுக்கு விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் தமது ஆதரவை வழங்கத் தொடங்கியுள்ளனர்.

அப்பகுதியில் ஒன்று கூடியுள்ள இளைஞர்கள் உண்ணாவிரதம் இருப்பவருக்கு ஏதாவது நடந்தால் கூட்டமைப்பு பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




No comments:

Post a Comment