மகாவலி திட்டத்தின் கீழ் வட மாகாணத்திற்கு நீர் கொண்டு வருவது,வடக்கு மாகாணத்தின் குடிசனப் பரம்பலைப் பாதிக்கும் என்று வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
“இரண்டு மாகாணங்களுக்கு இடையிலான விடயங்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் வருவதுடன், மத்திய அரசாங்கம் தான் விரும்பியவாறு குடியேற்றங்களைச் செய்யும். இது வடக்கு மாகாணத்தின் குடிசனப் பரம்பலைப் பாதிக்கும்.
மத்திய அரசாங்கத்தின் இதுவரைக் காலத்திலான செயற்பாடுகள் சிங்கள குடியேற்றங்களையும், சிங்கள மயமாக்கலையும் ஊக்குவித்துள்ளதன் காரணமாக, இந்த விடயத்தினை மிகவும் நிதானமாக அணுகவேண்டிய தேவை வடமாகாணத்திற்கு இருக்கிறது. இது தொடர்பில் வடக்கு மாகாணசபை, மத்திய மற்றும் வடமத்திய மாகாணசபையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டாலும் அது சட்டப்படி செல்லுமா?என்ற கேள்வி உள்ளது. இதற்கான சரத்துக்கள் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:
Post a Comment