July 27, 2016

உடையார்கட்டு மாணவர்களின் பற்சுகாதாரத்தை பேணுவதற்கான பற்சுகாதார நிலையம் திறப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் பற்சுகாதாரத்தை பேணுவதற்கான பற்சுகாதார நிலையம் திறந்து வைத்தல்.

கடந்த 30.06.2016 அன்று உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் பற்ற்சுகாதரத்தை பேணுவதற்கான பற்ச்சுகாதர நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை அவுஸ்ரேலிய மருத்துவ நிதியம் வழங்கியதுடன் அனுசரணையை கல்வி வளர்ச்சி அறக்கட்டளை-கிளிநொச்சி வழங்கியது.
இந் நிகழ்வில் அவுஸ்ரேலிய மருத்துவ நிதிய தலைவர் dr.பொன்.கேதீஸ்வரன் அவரின் துணைவியார் dr.சிவரதி கேதீஸ்வரன் கலந்து கொண்டதுடன்,பிரதம விருந்தினராக கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல பாடசாலைகளின் மாணவர்கள் இந் நிலையத்தின் மூலம் இலவசமாக பயன் பெற முடியும்.இங்கு கடமைபுரியும் வைத்தியர்கள்,உத்தியோகத்தரின் கொடுப்பனவுகளை கல்வி வளர்ச்சி அறக்கட்டளை-கிளிநொச்சி நிறுவனம் ஏற்று நடத்தும் என அதன் தலைவரான வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டார்.
இதே போன்றதொரு சிகிச்சை நிலையம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கனடா தமிழ் மருத்துவ சங்கத்தினரின் நிதி உதவியுடன் 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகவும் நல்ல முறையில் இயங்கி வருவதுடன் இதுவரை ஏழாயிரம் மாணவர்களுக்கு மேல் பயன்பெற்றுள்ளனர் என்பதுடன் சிகிச்சிகள் மருந்துகள் மாணவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருவதாகவும் இந் நிலையத்துக்கு வேறு பாடசாலைகளில் இருந்து மாணவர்களை ஏற்றி வந்து சிகிச்சை அளித்து திருப்பிக்கொண்டு விடுதல் வரையான எல்லாவற்றையும் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை-கிளிநொச்சி நிறுவனமே பொறுப்பேற்று நடத்தி வருவதாகவும் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டார்.
பிரதம விருந்தினர் தனது உரையில் கிளிநொச்சியில் இது போன்ற நிலையம் ஆற்றி வரும் சேவையை தான் அறிந்துள்ளதாகவும்.இது மாணவர்களுக்கு மிக அவசியமானதும் மகத்தானதும் என குறிப்பிட்டு முல்லைத்தீவு மாணவர்கள் அனைவரும் இதில் பயன் பெற வேண்டும் என்றும் அதற்க்கு அம்மாவட்ட அதிபர்கள்,ஆசிரியர்களளும் முழு ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந் நிலையத்தின் நிதி வழங்குனர் அவுஸ்ரேலிய மருத்துவ நிதியத்தின் தலைவர் வைத்தியர் பொன்.கேதீஸ்வரன் தமது உரையில் இலங்கையின் தமிழ் பகுதிகளான யாழ்பாணம்,கிளிநொச்சி,திருகோணமலை,மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் கோடிக்கணக்கான செலவில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு உள்ளதாகவும் தொடர்ந்து பல செயல்திட்டங்களை செய்யப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்தார்.
விழாவுக்கு முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டங்களின் கல்வி பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment