July 24, 2016

எல்லாளனின் சமாதியை கண்டு பிடிக்குமாறு டக்ளஸ் கோரிக்கை!

எல்லாளனின் சமாதியை கண்டு பிடிக்குமாறு டக்ளஸ் கோரிக்கை
எல்லாள மன்னரின் சமாதியை கண்டு பிடிக்குமாறு முன்னாள்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.



எல்லாள மன்னரின் சமாதி கண்டு பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.துட்டகெமுனு மன்னருக்கும் எல்லாளன் மன்னருக்கும் இடையிலான போர் இன முரண்பாடாக சிலர் சித்தரிவித்து வருவதாகவும் அது முற்றிலும் பிழையானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இரண்டு இனங்களுக்கு இடையிலான போராக இந்தப் போர் கருதப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.அனுராதபுர இராசதாணியை கைப்பற்றும் நோக்கில் இரு மன்னர்களுக்கும் இடையில் போர் நடைபெற்றதாகவும், இன முரண்பாட்டு போர் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


துட்டகெமுனு மன்னன் எல்லாள மன்னரை ஒரு போதும் எதிரியாக நோக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் எல்லாளனின் சமாதியை கடந்து செல்லும் போது அதற்கு மரியாதை செலுத்துமாறு துட்டகெமுனு மன்னர் உத்தரவிட்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.


எல்லாள மன்னரின் சமாதியை கண்டு பிடித்து அதனை பாதுகாக்காவிட்டால் மன்னர் துட்டகெமுனுவை அவமரியாதை செய்ததாகவே கருதப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment