இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் பதிவாகியுள்ளதாக பிரித்தானிய அரசாங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இன்னும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு ஓரளவு சாதமான சூழ்நிலை கடந்த ஆறு மாதங்களில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் சவால்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும், இராணுவத்தினர் சிவில் பணிகளிலிருந்து விலகிக் கொள்வதாகவே தென்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
மிக முக்கியமான நபர்கள் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பலவந்த காணாமல் போதல் குறித்த சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும், முரண்பாட்டு வலயங்களில் பாலியல் வன்கொடுமைகளை முடிவுக்குக்கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு இணங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியவை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகளின் போது மனித உரிமை பாதுகாப்பினை மேலும் உறுதி செய்ய முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு சர்வதேச தரத்திலான புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென அறிக்கையில் மீளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment