February 26, 2015

கமலேந்திரனுக்கு யாழில் நிற்கவும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவும் அனுமதித்தது நீதிமன்றம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும் வட மாகாண சபையின் எதிர் கட்சித் தலைவருமாக இருந்த கச்தசாமி
கமலேந்திரனின் கமல்) மீது மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டு இருந்த நிபந்தனைகள் சில இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தினால் தளர்த்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் கொலை செய்யப்பட்டமை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட பினணயில் விடப்பட்ட கமலேந்திரன் சில நிபந்தனைகளின் அடிப்படையில் விடப்பட்ட கொழும்பில் தங்கியிருந்தார்.

இன்று மேல் நீதிமன்றத்தில் வழக்க விசாரனணக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் அவருடைய சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரனி றெமேடியஸ் விடுத்த வேண்டுதலின் அடிப்படையில் மேல் நீதிமன்ற நீதிபதியினால் குறிப்பிட்ட விடயங்களில் ஈடபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இவர் யாழ் மாவட்டத்தில் நிற்பதற்க்கும் மற்றும் அரசியல் கடமைகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை ஒவ்வொரு மாதமும் முதலாம் வாரமும் கடைசி வாரமும் அச்சுவேலி பொலிஸ் நிலையம் சென்ற கையொப்பம் இட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment