ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாத அரசு நடத்திய இனப்படுகொலையை உலகிற்கு எடுத்துக்கூறிய முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7 ஆம் ஆண்டு நினைவுநாள் டென்மார்க்கில் நினைவுகூரப்படவுள்ளது.
நாளை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு டென்மார்க் நாடாளுமன்றத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வை டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
ஈழத்தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக அரங்கேறிக்கொண்டிருக்கும் அவலங்களை சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறவும் அநியாயமாக கொல்லப்பட்டோருக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தியும் டென்மார்க் வாழ் தமிழர்களை இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment