இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரன் ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில்; இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோது, இவர்களை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், பூ.பிரசாந்தன் கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி காத்தான்குடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது சகோதரரான பூ.ஹரனும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment