முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் மத்தியில் செல்வதற்காக அவரைப்போன்ற உருவத்தை ஒத்த இயந்திர மனிதனை பயன்படுத்திய இரகசியத்தை அவரது செயலாளர் அம்பலப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் வெளிவரும் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் செயலாளர் கே.எச்.ஜே விஜயதாஸ இந்த தகவலை கூறியிருக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைக்கும் ஒரு மக்கள் தலைவனாக மிகவும் பிரபல்யமடைந்திருந்தார்.
இதற்காக நடமாடும் சேவையொன்றையும் அவர் முன்னெடுத்திருந்தார்.
பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் நெருக்கடியான சூழ்நிலையை அவர் எதிர்கொண்டிருந்ததினால் மக்களை சந்திக்க முடியாத சந்தர்ப்பங்களும் ஏற்பட்டதாகவும், இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலை தோன்றியிருந்த காலப்பகுதியிலேயே அவரை ஒத்த இயந்திர மனிதனை அறிமகப்படுத்தியதாக பிரேமதாசவின் செயலாளர் கே.எச்.ஜே விஜயதாஸ கூறுகின்றார்.
மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்காக அவர் தன்னைப்போன்ற உருவ வடிவமைப்பைக் கொண்ட இயந்திர மனிதனை உருவாக்கியதாகவும், அதனை தனது அதிகாரிகளின் உதவியுடன் மக்கள் மத்தியில் அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
குறித்த ரோபோ இயந்திரத்தில் ரணசிங்க பிரேமதாஸ தனது குரலை பதிவுசெய்திருந்ததோடு மக்களிடம் அந்த ரோபோ செல்லும்போது கதைக்கக்கூடிய வகையிலும், கைகளை அசைக்கக்கூடிய விதத்திலும் வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் கே.எச்.ஜே விஜயதாஸ கூறியுள்ளார்.
மக்களின் குறைநிறைகளை கேட்டறிவதற்காக இயந்திர மனிதனிடத்தில், உங்கள் குறை என்ன? அதனை என்னிடம் எழுத்துமூலம் தாருங்கள். விரைவில் அதற்கு பதில் அளிக்கப்படும் என்று பிரேமதாஸவின் குரல்பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவரது செயலாளராக கடமைபுரிந்த கே.எச்.ஜே விஜயதாஸ குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment