June 5, 2016

இலங்கையின் தெல்லிப்பழை யூனியன் UK சார்பில் கிரிகட் போட்டி!

The Union Sports Association, UK சார்பில் இலங்கையின் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 200ம் ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் விதமாக கிரிக்கெட் போட்டி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதத்தை
பரப்புவதற்காக இலங்கை வந்த டானியல் பூவரம் என்பவர் அங்குள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு கல்வியறிவை புகட்ட சிறிய பள்ளி தொடங்கினார். இதுதான் இலங்கையின் முதல் ஆங்கிலப்பள்ளியாகும்.
அது காலப்போக்கில் பல மாற்றங்கள் அடைந்து யூனியன் கல்லூரியாக மாறி தனது 200வது ஆண்டுவிழாவை கொண்டாடுகிறது. இதனை கொண்டாடும் விதமாக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை Morden Park, London-ல் இந்த மாபெரும் நிகழ்வு நடைபெறவுள்ளது. 10, 12, 14, 16 வயது பிரிவுகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளும் சிறுவர், சிறுமியர்களுக்கான சுவட்டு(Athletics) மைதான போட்டிகளும் நடைபெறவுள்ளது. போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்க திட்டமிட்டுள்ளதுடன், தாயக மணம் கமழும் உணவுகள் உடனுக்குடன் செய்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு The Union Sports Association, UK அழைப்பு விடுத்துள்ளது. இந்த பாரம்பரியமிக்க நிகழ்ச்சிக்கு ஊடக அனுசரணை வழங்குவதில் லங்காசிறி பெருமையடைகிறது. இதுபோன்ற விளையாட்டு, பொதுமக்களின் நிகழ்ச்சிகளுக்கு ஊடக அனுசரணை பெற விரும்புவோர் pr@lankasri.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment