வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 25 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நவீன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மஹிந்த ஆட்சிக் காலத்தில் அவர்களின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டது. எமது அரசாங்கம் இதில் மாற்றத்தை செய்துள்ளது. அரசியல் கட்சி, நிறம், இனம், மதம், ஜாதி பேதம் பாராது இரட்டை குடியுரிமை வழங்கவுள்ளது.
இதுவரையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியாவை சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மாதம் குறைந்தது இரண்டாயிரம் பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கவுள்ளோம்.
இதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்குள் 25 ஆயிரம் வெளிநாட்டவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment