June 5, 2016

துருக்கி நாட்டின் 8 அகதிச் சிறுமிகளை கற்பழித்தவனுக்கு 108 ஆண்டுகள் சிறை!

துருக்கி நாட்டின் தெற்கு காஜியண்டெப் மாகாணத்திலுள்ள நிஜிப் பகுதியில் அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. சிரிய எல்லைப்பகுதியில் இந்த முகாம் உள்ளது. இந்த முகாமில் 10, 800 பேர் தங்கியிருந்தனர்.

இந்த முகாமில் இருந்த 8 சிரிய நாட்டு சிறுமிகளை அந்த முகாமில் வேலை செய்த 29 ஊழியர் எர்டல் என்பவர் கற்பழித்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பான வழக்கு துருக்கி நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 8 சிறுமிகளை கற்பழித்த குற்றவாளிக்கு 108 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் 289 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment