June 5, 2016

ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் சில முக்கிய பரிந்துரைகள்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு,
இலங்கை அரசாங்கத்தினால் இணைஅனுசரணை வழங்கப்பட்ட இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலை யும் ஊக்குவித்தல் என்ற பிரேரணையில் 20 பரிந்து ரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதில் முக்கியமான சில பரிந்துரைகள் பின்வருமாறு

6.பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதிபதிகள் விசாரணையாளர்கள் சட்டத்தரணிகளுடன் உள்நாட்டு நீதித்துறை கட்டமைப்புடன் கூடிய விசாரணை பொறிமுறையை முன்னெடுக்கவேண்டும்.

7.சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தண்டனை விதிக்க உள்நாட்டு சட்டங்களை திருத்தி அமைக்க வேண்டும். குறிப்பாக உள்நாட்டு சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

10.அரசாங்கப் படையினரால் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கன. குறிப்பாக சிவியலின் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடு முழுமையான அகற்றிக் கொள்ளப்பட வேண்டும். சிவலியன்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும்

11.ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிறுபான்மை மத இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டியதுடன் மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க வேண்டும்.

15.மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட அனைத்து ஆவணங்கள் அறிக்கைகளையும் பேணிப் பாதுகாக்கும் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும். தனியார் அல்லதுபொது நிறுவனங்களினால் வெளியிடப்பட்டஅறிக்கைகள் அனைத்து பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

16.அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில் அதிகாரப் பகிர்வு திட்டமொன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். அவ்வாறு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பதன் மூலமே நாட்டின் அனைத்து சனத்தொகையினரும் மனித உரிமைகளை அனுபவிக்க முடியும். 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உள்ளிட்ட அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

18. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அலுவலகம், இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றதா என்பது மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

இந்த நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 அமர்வுகளின் போது வாய்மொழி மூல அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.

பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பதுகுறித்து 34 கூட்டத் தொடரில் முழு அளவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

20.ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலு வலகம் விசேட அறிக்கையாளா்கள் ஆணையாளர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கவேண்டும்.

No comments:

Post a Comment