June 5, 2016

வலியில்லாமல் குழந்தையை பிரசவிக்க புதிய மருந்தை பரிந்துரைக்கும் சுகாதார அமைச்சர்!

கரப்பிணி பெண்கள் பிரசவத்தின் போது ஏற்படும் வலியை குறைப்பதற்கான மருந்து ஒன்றை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.


என்டர் நொக்ஸ் என்ற வலிக்குறைப்பு மருந்தினை சகல கர்ப்பிணிப் பெண்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் தற்போது எவ்வித மருந்து தட்டுப்பாடும் இல்லை என்றும், எங்காவது மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுமாயின் அது அதிகாரிகளின் தவறு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்க வைத்தியசாலைகளுக்கு ஆண்டு தோறும் மருந்துகளுக்காக 60 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இதனை குறைப்பதற்காக உள்நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சகல வைத்தியசாலைகளிலும் ஈ-ஹெல்த் சேவையினை நடைமுறைப்படுத்துவதும் அமைச்சரின் மற்றுமொரு யோசனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment