June 5, 2016

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

யுத்தம் இடம்பெறும் நாடுகளில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.


சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொண்ட நாடுகளின் 2015ம் ஆண்டுக்குரிய பட்டியல் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுாப்பு சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கை, அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

சிறுவர்களை யுத்த செயற்பாடுகளில் ஈடுபடுத்தல், சிறுவர் கொலை, சிறுவர் துஷ்பிரயோகம், கடத்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்குள்ளாக்கிய அமைப்புகள் மற்றும் நாடுகள் அடங்கிய விபரம் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment