உயிர்நீத்த உறவுகளுக்கு உணர்வோடு அஞ்சலி செலுத்துவோம் என யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக முன்றலில் நாளை 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த விதிகளை மீறி, தனியொரு இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப்பெரிய மனிதப் படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவுகள் இன்றும் காயாத குருதியாகி, ஆறாத ரணங்களாக எங்கள் நெஞ்சங்களில் புரையோடிக்கிடக்க இந்த நாள் மீண்டும் ஒருமுறை நினைவில் எழுகின்றது.
அந்த நாளில் உயிர் துறந்த அப்பாவி உயிர்களுக்கு மறுக்கப்பட்ட நீதியானது இன்றும் மறைக்கபட்ட நீதியாகியுள்ளது.
நல்லாட்சி என்ற பெயரிலான அரசு இன்று குற்றமிழைத்தோரை எவ்வித கேள்விக்கும் உட்படுத்தாமல் சுதந்திரமாக நடமாட விட்டிருக்கின்றது.
இந்த நிலையில், தமிழ் பேசும் ஒரே குற்றத்திற்காக வயது பேதமின்றி, கருவுற்ற குழந்தை முதல் கட்டிலில் கிடந்த முதியோர் வரை ஈவிரக்கமில்லா பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட இந்த கறுப்பு நாளில் அத்தனை உறவுகளினதும் ஆத்ம சாந்திக்காகவும், அவர்களினது நீதிக்கான வேண்டுதலாகவும், உண்மையான உணர்வுகளோடு அஞ்சலி செலுத்துவோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment