2009ல் சிங்களம் மேற்கொண்ட தமிழின அழிப்பில் தம் உயிர்களை இழந்த எம் உறவுகளை நினைவுகூர்ந்து, நேற்று (16.05.2016) Grindsted நகர தேவாலயத்தில் Billund நகரசபை வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஆத்மசாந்தி பிராத்தனை இடம் பெற்றது. அருட்தந்தை Steen Søvndahll அவர்களின் உருக்கமான பூசையுடன் தேவாலயத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட நினைவுத்துபியில் உயிர் நீர்த்த வீர மறவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தீபங்கள் ஏற்றி மலர்கள் துவி அஞ்சலிக்கப்பட்டதோடு எம் இளையோர்களால் விசேட உரைகளும் இடம்பெற்றது.
குமரிக்கண்டத்தில் தோன்றிய தொன்மையான மூத்த மனித இனமும், அவன் மொழியும், திட்டமிடப்பட்டே எதிரிகளால் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. எனவே ஒவ்வொரு தமிழனும் வடுக்கள் சுமந்த தம் வரலாற்றினை நெஞ்சில் சுமப்பதோடு, அடுத்த தலைமுறைக்கும் தமிழனின் வரலாற்றினை சுமக்க கற்றுக்கொடுத்து வராவிட்டால், தமிழினைத்தையும் அவன் மொழியையும் எதிரிகள் அழித்தான் என்பதை விட தமிழன் தானே அழித்தான் என்ற பெரும் வரலாற்றுப் பழியை நம் எதிர்கால சந்ததியினர் எம்மீது சுமத்துவார்கள். வரலாற்றை சுமந்து சுமந்து எம் அடுத்த தலைமுறையினர்க்கு எடுத்துரைப்பதின் ஊடாக நம் இனம் காப்போம் நம் மொழி காப்போம்.
No comments:
Post a Comment