October 12, 2015

அன்புடன் எங்களைப் பாதுகாருங்கள் என்ற தொனிப் பொருளில் அமைதிப் பேரணி (படங்கள் இணைப்பு)

அமரர் கனகசிங்கம் ஞாபகார்த்தமாக வவுனியா செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம் )இல் அவரது மகன் கமலசீலன் அனுசரணையில் தமிழ் விருட்சம் ஏற்பாட்டில் மூத்தோர் சங்க வளாகாத்தில் சர்வதேச மூத்தோர் தினம் 11.10.2015 ஞாயிறு அன்று வெகு விமர்சையாக நடை பெற்றது .


நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன அவர்களும் கௌரவ விருந்தினர்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்னி அமைப்பாளர் கோவிந்தராஜ் ,பாடசாலை அதிபர் எஸ்.தர்மகுலசிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர் .

120 மூத்தோர்களுடன் இயங்கும் மாணிக்கம் பண்ணை மூத்தோர் சங்கம் 3 வருடங்களாக தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த வருடம் ஸ்கொட்லாந்தில் வசிக்கும் கமலசீலன் அனுசரணையில் அவரது தந்தையார் அமரர் கனகசிங்கம் ஞாபகார்த்தமாக இந்த நிகழ்வு தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )அவர்களால் ஏற்பாடு செய்யபட்டு நடைபெற்றது.

சிறுவர் தினத்தை முன்னிட்டு உலக தரிவன நிறுவனத்தின் அனுசரணையுடன் கிரான் கிறிஸ்தவ ஐக்கியத்தினரினால் ஒழுங்கு செய்யப்பட்ட அன்புடன் எங்களைப் பாதுகாருங்கள் என்ற தொனிப் பொருளில் அமைதிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கிறிஸ்தவ ஐக்கியத்தின் தலைவர் செ.திருமறைதாசன் தலைமையில் நடைபெற்ற பேரணியானது முறக்கொட்டாஞ்சேனையில் இருந்து கிரான் மெதடிஸ்த குருமனை வரை ஐந்து கிலோ மீற்றர் தூரம் நடைபவனியாக வருகை தந்தனர்.

இதன்போது கிரான் கிறிஸ்த ஐக்கியத்தின் அங்கம் வக்கும் தெடிஸ்த திருச்சபை, சிறுமந்தை சபை, கிறிஸ்தவ அனுகூல சபை, தேவசபை, புனித பவுல் ஆலயம், இலங்கை அமெரிக்க மிசன், வேதாகம மத்தியஸ்தர்கள் சபை போன்ற திருச்சபைகளை சார்ந்த மற்றும் சமூக சார் அமைப்புக்கள் என ஐநூறுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிறுவர் துஷ்பிரோயகத்தினை கண்டித்தும், சிறுவர் பாதுகாப்பினை வலியுறுத்துவதுமான பதாதைகளை ஏந்திக் கொண்டு சென்றனர். அத்துடன் வித்தியா மற்றும் சேயாவுக்கு நடந்த கொடுமைகளையும் எதிர்த்து வாசகங்கள் மூலம் நினைவூட்டினர்.

இதில் பெற்றோரே வீட்டில் சண்டை போடாதீர்கள், உங்கள் இலாபத்திற்காக கல்விச் சுதந்திரத்தை தடுக்காதீர்கள், பெற்றோரே வெளிநாடு செல்லாதீர்கள், சிறுவர்களை வதைக்காதே, எங்கள் தொலைந்த பெற்றோரை தேடித்தாருங்கள், சிசுவாகும் போதே அழிக்காதீர்கள், கருத்து வெளியிட உரிமை அழியுங்கள், வித்தியாவுக்கு நடந்தது எங்களுக்கு வேண்டாம், சேயாவுக்கு நடந்தது எங்களுக்கு வேண்டாம், மதுபானம் குடிக்க பழக்காதீர்கள் உட்பட பல சுலோகங்களை ஏந்தியாவாறு கலந்து கொண்டனர்.

அத்துடன் பலர் சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிரான கையெழுத்துக்களையும் இட்டனர்.










No comments:

Post a Comment