அண்மையில் யேர்மனியில் நடைபெற்ற “ஒவ்வொரு யுத்தமும் ஒரு பொய் உடன் தொடங்குகிறது: இன்று போர்கள் எப்படி உருவாகப்படுகின்றன ? ” எனும் கருத்தரங்கில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு சி.ஐ.ஏ. யின் முன்னால்
உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர் .
கலந்துகொண்ட அதிகாரிகளாகிய றாய் மக்கோவேர்ன் மற்றும் எலிசபெத் முற்றாய் ஆகிய இருவரும் சி.ஐ.ஏ. யின் முக்கிய உயர் ஆய்வாளர்களாக 30 வருடங்களுக்கும் மேலாக கடமை புரிந்துள்ளார்கள் . குறிப்பாக றாய் மக்கோவேர்ன் அவர்கள் அமெரிக்காவின் கடந்த ஏழு நாட்டுத் தலைவர்களுக்கு கீழ் கடமை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .இவர்கள் தமது உரையில் அமெரிக்கா பெரும் வல்லரசின் பூகோல நலன் கொண்ட யுத்த ஈடுபாடுகளையும் , அதன் வெளிவிவகார அரசியல் பின்னணியையும் அம்பலப்படுத்தியிருந்தார்கள்.
நடைபெற்ற நிகழ்வில் கேள்வி – பதில் நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதி அமெரிக்காவின் ஈடுபாடு இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பாக எப்படி இருந்தது எனும் கேள்விக்கு றாய் மக்கோவேர்ன் அவர்கள் பதில் அளிக்கையில் அமெரிக்கா முற்றுமுழுதாக தனது பிராந்திய பூகோல அரசியல் நலன்களை மட்டுமே கருத்தில் எடுத்து தனது அரசியலை முன்னெடுக்கின்றது என்பதையும் அதற்கு இலங்கை விதிவிலக்கு இல்லை என்பதையும் எடுத்துரைத்தார் . றாய் மக்கோவேர்ன் தொடர்ந்து கருத்து கூறுகையில் உலகளாவிய ரீதியில் இடம்பெறுகின்ற சில போர்கள் தமது தேவைக்காக அமெரிக்காவால் உருவாக்கப்படுகின்றன அல்லது அடக்கப்படுகின்றன. அமெரிக்கா தனது தலையீட்டை நியாயப்படுத்த அப்பட்டமான பொய்களை வெளியுலகத்துக்கு எடுத்துரைகின்றன என்பதையும் வலியுறுத்தி தனது உரையை நிகழ்த்தி இருந்தார் .
றாய் மக்கோவேர்ன் அவர்கள் ஓய்வுக்கு செல்லும் போது யோர்ச் புஷ் அவர்களால் பதக்கம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார் . இராக்கில் நடைபெற்ற சித்திரவதையில் சி.ஐ.ஏ. யின் அதிகாரிகள் ஈடுபட்டதை கண்டித்து 2006 ஆண்டு இப் பதக்கத்தை றாய் மக்கோவேர்ன் திருப்பி கொடுத்திருந்தார் என்பது வரலாற்று பதிவாக உள்ளது

No comments:
Post a Comment