இலங்கையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பல்கலைக்கழக உடமைகளுக்கு சேதம்விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை 20ஆம் திகதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க அக்கரைப்பற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்மாணவர்களை விடுதலைசெய்யக் கோரி இன்று பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகம் முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வியாழக்கிழமை பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாக மாணவர்கள் தங்களுக்கு வளாகத்திற்குள்ளே விடுதி வசதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பல்கலைக்கழக உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் செய்த புகாரையடுத்து இம் மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் அரச துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி இன்று புதன்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்திற்கு முன்பாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பட்டதாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1,400 வேலையற்ற பட்டதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தின் தலைவரான எஸ். உதயவேந்தன் கூறுகின்றார்.
தங்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு தரப்பினராலும் உறுதி மொழிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அதில் தாங்கள் நம்பிக்கை இழந்துள்ளதன் காரணமாகவே இந்த போராட்டம் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக அம்பாரை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகளினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்கின்றது.

No comments:
Post a Comment