September 19, 2015

கோண்டாவிலில் பண்பாடு தடம்மாறிப்போகின்றமை தொடர்பில் பட்டி மன்றம் (படங்கள் இணைப்பு)

கோண்டாவில் அற்புத நர்த்தன விநாயகர் ஆலய மகோற்சவத்தினை முன்னிட்டு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும் குமரன் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடத்திய கலை விழாவும் பரிசளிப்பு விழாவும் 16.07.2015 இரவு ஆலய முன்றிலில் இடம்பெற்றது.

நிலையத் தலைவர் ம.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக தமிழர் பண்பாடு தடம் மாறிப் போவதற்குப் பெரிதும் காரணமானவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற பொருளில் பட்டி மன்றம்  இடம்பெற்றது.
ஆண்களே என்ற அணியில் வரணியூர் வி.சிவராசா, பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் இ..சர்வேஸ்வரா ஆகியோரும் பெண்களே என்ற அணியில் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலஷண்முகன், மக்கள் வங்கி உத்தியோகத்தர் பெ.ஹர்சன் ஆகியோரும் வாதிட்டனர்.
நடுவராக கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் கலந்து கொண்டார்.





No comments:

Post a Comment