சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணியானது, எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபை முன்றல் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
இக்கவனயீர்ப்புப் பேரணியில் தமிழின விடுதலைக்குத் தொடர்ச்சியாக போராடி வருகின்ற தமிழகத் தமிழின உணர்வாளர்களான நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம்,
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
எதிர்வரும் 21.09.2015 திங்கட்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் தமிழக இன உணர்வாளர்களோடு இணைந்து மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த தமிழ் உறவுகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்வதோடு,
தங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களையும் அழைத்து வருமாறும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும்;, தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஜக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்திய இப் பேரணியின் அவசியத்தையும், காலத்தையும் உணர்ந்து அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
No comments:
Post a Comment