ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவ சங்க கூட்டத்தில் தமிழகம் தழுவிய போராட்டதை அறிவித்துள்ளதோடு மத்திய மாநில அரசுகளுக்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று பகல் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இந்திய தேசிய விசைபடகு மீனவர்சங்க செயலாளர் தெட்சணாமூர்த்தி தலைமையில் அவசர ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது இதில் தொடாச்சியாக மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் விவகாரத்தில் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருவதற்க்கு கண்டத்திர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் மீனவர்களின் வாழ்வாதாரமான இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 32 படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டு மீட்கப்படாமல் இலங்கை கடற்பரப்பில் முழ்கிய 18 படகுகளுக்கு முழு நிவாரணத்தொகை வழங்க வேண்டும், பேச்சு வார்ததையின் மூலம் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வேண்டும். என்பன உள்ளிட்ட மூன்று அம்சக்கோரிக்கைகைள 15 தினங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் தமிழகம் தழவிய ஒருங்கிணைந்த போராட்தை நடத்தவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கடந்த 4 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் சம்பவங்கள் மற்றும் கைது நடவடிக்கைகளை கன்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 12 மீனவ சங்க உறுப்பினர்கள் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொன்டு நாளை வழக்கம் போல மீன்பிடிக்கச் செல்வதாகவும் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment