நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களின் வெற்றிடத்திற்கு, அத்தேர்தலில் போட்டியிட்டு விருப்புவாக்கு அடிப்படையில் அடுத்துள்ளோரை தெரிவு செய்வதற்கு, கட்சிகளின் தலைவர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,
மாகாணசபை உறுப்பினர்கள் பலர் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பங்களில், குறித்த தேர்தலில் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளோரை கண்டு கொள்ளாமல் நியமனங்கள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், உள்ளூராட்சி சட்டத்திற்கு அமைய இவ்வாறு மேற்கொள்ள முடியுமாக இருந்தாலும், இந்நிலைமை கட்சியின் உள்ளக ஜனநாயகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
மக்களின் ஆணையை விடுத்து, கட்சித் தலைமையின் விருப்பங்களுக்கமைய செயற்படுவது, பிரதிநிதிகளின் ஜனநாயகத்தை மதிக்காத தன்மையாகும்,
அத்துடன் இந்நிலைமையினை தவிர்க்கும் வகையில், பல்வேறு சந்தர்ப்பங்களில் சிவில் சமூகத்தினால், நீதிமன்ற உதவியும் நாடவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளன.
தேர்தலில் தோல்வியடைந்தோரை, தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்தில் நியமிப்பது, விருப்பு வாக்கு பட்டியலை தவிர்ந்து வேறொருவரை மாகாண சபைக்கு நியமிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதென குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment