அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை ஆதரிப்பதற்கு தயங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
நாம் எதிர்க்கட்சியின் பணிகளை சிறந்த முறையில் செய்வோம். அப்பாவி
கட்சி ஆதரவாளாகளின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்.
கட்சி ஆதரவாளாகளின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்.
நல்லவற்றுக்கு நாம் எப்போதும் ஆதரவளிப்போம். தீயவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் முதுகெலும்பும் எமக்கு உண்டு.
நல்ல திட்டங்களை அமுல்படுத்த கட்சி, நிற பேதங்கள் கிடையாது.
எனினும் நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்லும் திட்டங்களை, ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வர முயற்சித்தால் அதற்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து போராடுவதற்கும் தயங்கப் போவதில்லை என பவித்ரா வன்னியாரச்சி கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றின் பங்களிப்பு பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment