மாவீரர்களின் இலட்சியமும் தமிழீழ மக்களின் தியாகமும் இன்று விலைபேசி விற்கப்படும் நிலையில் தமது பூகோள அரசியல் நலன் கருதி சில வல்லரசுகள் தமிழீழ விடுதலையைத் தாமதிக்கும் வேலைகளில்
இறங்கியுள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தின் தர்மத்தை நன்கு உணர்ந்த வல்லரசுகள் இன்று தமிழரை வைத்தே தமிழரின் விடுதலையை தாமதப்படுத்த முயற்சிக்கின்றன.
ஆனால், எமது ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் நாங்கள் நடாத்திய அறவழிப்போராட்டங்கள் எமது தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தருவதற்கான கதவுகளைத் திறந்தன. தமிழீழ மக்களின் விடுதலைக்கான முதல் கதவு திறக்கப்பட்ட நேரத்தில் எமது விடுதலைக்கு நாம் கொடுத்த உயிர் தியாகங்களை சில சுயநல வாதிகள் தமது நலனுக்காக பேரம் பேசுவதை நாம் அனுமதிக்க முடியாது.
ஆகவே புலம்பெயர் தமிழீழ உறவுகளாகிய நாம் எமது வரலாற்று பணியை உணர்ந்து எம் தமிழீழ மக்களையும் தேசத்தையும் காப்பாற்ற அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறான போராட்டங்களினூடகவே எமக்கு சிங்கள பேரினவாத அரசுகளினால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கேட்கவும் அதன் மூலம் எமது மக்களையும் மண்ணையும் பாதுகாக்கவும் முடியும்.
ஆகவே புலம்பெயர் தமிழீழ உறவுகளாகிய நாம் எமது வரலாற்று பணியை உணர்ந்து எம் தமிழீழ மக்களையும் தேசத்தையும் காப்பாற்ற அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறான போராட்டங்களினூடகவே எமக்கு சிங்கள பேரினவாத அரசுகளினால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கேட்கவும் அதன் மூலம் எமது மக்களையும் மண்ணையும் பாதுகாக்கவும் முடியும்.
ஆகவே, மனித உரிமைகள் ஆலோசனை அவையின் 30 ஆவது கூட்டத்தொடர் செப்ரம்பர் மாதம் 14 ம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன் விசாரணைக் குழுவின் (OISL) அறிக்கையும் வெளிவரவுள்ள இவ்வேளையில் 31.08.2015 பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன் இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகளின் தூதரகங்கள், ஐரோப்பிய பாராளுமன்றம், மாநகர சபைகள், மேல் சபைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், என அனைவரிடத்திலும் தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மூலமே நீதி கிடைக்குமென வலியுறுத்தி மனித நேய ஈருரளிப் பயணம் தொடங்கியுள்ளது.
இந்த மனித நேய ஈருருளிப் பயணம் செப்ரம்பர் 14ம் நாள் (14.09.2015) பிரான்ஸ் நாட்டு கிழக்குப்பாகத்திலுள்ள Sarreguemines என்னும் இடத்தை காலை 8.00 மணிக்கு வந்தடையவுள்ளது. நான்கு நாட்கள் பிரான்ஸ் அரசிடம் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், தமிழீழ மக்கள் தமது விருப்பை வெளிப்படுத்த இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாக்கெடுப்பினை நடாத்தவும் அவ்வாக்கெடுப்பில் புலம்யெர் தமிழீழ மக்கள் கலந்து கொள்ள ஐக்கிய நாடுகள் அவை ஆவன செய்தல், தமிழீழ நிலப்பரப்பில் இயல்பு வாழ்க்கை உருவாக்கப்பட்டு தமிழீழ மக்களின் பேச்சு நடமாட்ட சுதந்திரங்களை உறுதிப்படுத்தல் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்நிறுத்தியே மனித நேய ஈருருளிப்பயணம் இடம்பெறுகிறது. தமிழீழ மக்களுக்கு நீதிகிடைக்க இந்த அறவழிப் போராட்டத்தில் பங்கெடுக்க இருக்கும் மனித நேயச் செயற்பாட்டாளர்களை எம்முடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
அத்துடன் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் 16.09.2015 புதன்கிழமை அன்று பிற்பகல் 15.30 மணி தொடக்கம் 17.00 மணிவரை அமெரிக்கத் துணைத்தூதரகத்திற்கு முன்பிருந்து ஐரோப்பிய ஆலோசனை சபை வரை நடைபெறும் கவனயீர்ப்பு பேரணி மற்றும் தமிழீழ மக்களுக்கு நீதிவேண்டியும் தமிழீழத்தை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்கக் கோரியும் வேண்டி செப்ரம்பர் 21ம் நாள் (21.09.2015) திங்கட்கிழைமை ஐக்கிய நாடுகள் அவையின் முன்பாக முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிலும் அனைவரையும் கலந்துகொண்டு தங்கள் வரலாற்றுக் கடமையைச் செய்யுமாறு வேண்டிநிற்கின்றோம்.
அத்துடன்; நிகழ்விற்கான போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில் பிரான்சிலிருந்து கடுகதி தொடருந்து ஒழுங்கும் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தருவதோடு பிரயாணத்திற்கான முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தொடர்புகளுக்கு: 06 62 84 66 06
06 59 08 29 75
06 06 77 64 99
தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு – பிரான்சு.
தொடர்புகளுக்கு: 06 62 84 66 06
06 59 08 29 75
06 06 77 64 99
தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு – பிரான்சு.
No comments:
Post a Comment