August 31, 2015

துரோகிகளும் அவர்கள் நடந்துவந்த பாதையும்!

இலங்கை வரலாற்றின் முக்கிய திருப்பு முனை தமிழீழ விடுதலைப்போராட்டமே. இந்த விடுதலைப்போராட்டத்தின் கறுப்பு அத்தியாயம் துரோகிகளின் கூடாரம் ஆகும். அந்த வகையில்
விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்து சுயநலன் பேணிய கருணா தமிழ் மக்கள் அனைவரினதும் துரோகி ஆகிவிட்டார்.
களமுனையில் மடிந்த மாவீரர்களையும் அவர்களின் தற்கொடையையும் பற்றி எண்ணவும் அந்த உன்னதமான கொடைபற்றி ஒரு வார்த்தையேனும் பேசவும் அருகதையற்ற உயிருள்ள சடலமாக கருணா உள்ள நிலையில், விடுதலைப்புலிகள் பற்றி பேசியதும் போராட்டம் பற்றி கருத்து கூறியுள்ளதும் இலங்கையில் அவர் தன் வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட ஒரு முயற்சியே ஆகும்.
விடுதலைப்போராட்டத்தின் உச்சக்கட்ட வேளையில் போராட்டத்தில் இருந்து தப்பியோடிய கருணா போராட்டம் பற்றியோ போராளிகள் பற்றியோ அன்றி போராட்டத்தை தங்களின் தோள்களில் தாங்கி வீரமரணம் அடைந்த தளபதிகளைப்பற்றியோ பேசுவதற்கு அருகதையற்றவர்.
சிறிலங்கா அரசும் அவர்களின் புலனாய்வு அமைப்பும் போட்ட எலும்பை நக்கி வாழ்ந்து
சதை வளர்த்த கருணா போன்ற துரோகிகளை தமிழ் மக்கள் என்றும் மன்னிக்கவே மாட்டார்கள்.
இந்த நிலையில் தான் விடுதலைப்போராட்டத்தை மறந்து தீயவர்களின் வழி சென்று வளர்க்கும்
உடலை காக்கை பருந்து கூட கொத்தித்தின்னாது.
இந்த நிலையில் இந்த துரோகிகளிற்கு ஊடகங்கள் மேடை அமைத்துக்கொடுத்திருக்கக்
கூடாது என்று நாம் பிரியப்படுகின்றோம்.
எனினும் கருணா, தான் தனது வாழ்வியலில் செய்த பிழைகளை நியாயப்படுத்தும் முகமாக தமிழக ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியானது தவறான பல கருத்துக்களை கொண்டுள்ளது என்பதனையும் நாம் இங்கு குறிப்பிடவிரும்புகின்றோம். ஒரு இனத்துக்கு எதிராக சுயநலன் கருதி எதிரிகளின் கூடாரத்தினுள் அடைக்கலன் புகுந்து உடல் வளர்த்த கருணா போன்ற துரோகிகளுக்கு பேசுவதற்கு கூட சந்தர்ப்பம் வழங்கக்கூடாது என்று தமிழினம் கருதுகின்றது.
இந்த நிலையில் கருணாவின் பேட்டியும் அந்த பேட்டியில் அவர் கூறுகின்ற கருத்துக்களும் அனைத்து தமிழ் மக்களினாலும் மக்கள் பிரதிநிதிகளினாலும் மறுதலிக்கப்படுகின்றது. விடுதலைப்போராட்டம் பற்றி பேசுவதற்கும் விடுதலைப்போராட்டத்தின் தியாகத்தை பற்றி கருணா சிந்திக்கவே தகுதியற்றவர் ஆகிவிட்டார். விடுதலைப்புலிகளினால் வெற்றிகொள்ளப்பட்ட பலபோர்க்களங்களை தானே முன்னின்று நடத்தியதாக கூறியுள்ளமை அருவருக்க வைத்துள்ளது.
சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்திற்கு சிறப்பு பெயர் பெற்ற விடுதலைப்புலிகள்
அமைப்பில் இருந்துகொண்டு தன்னிலை மறந்து ஒழுக்கம் கெட்ட கருணா விடுதலைப்புலிகள்
அமைப்பின் தலமையின் வழிநடத்தல் பற்றியும் முடிவுகள் பற்றியும் பேசுவதற்கு எள்ளவேனும்
பொருத்தமற்றவர். இனவாதிகளும் எதிரிகளும் ஆன சிறிலங்கா அரசு போட்ட பிச்சைக்கு
கட்டுப்பட்டு தடம் மாறி துரோகி பட்டத்துடன் கருணா வாழ்வதனை விட இறந்தே போகலாம்.
மஹிந்தவின் காலில் விழுந்து அவர் காலை நக்கி பெற்ற பதவி தற்போது பறிக்கப்பட்ட நிலையிலும் இந்த பதவி மீண்டும் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்;டிருப்பதும் இவருடைய பேச்சில் ஒளிந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு வகையில் குறித்த அமைச்சுப்பதவியை பெற்று மீண்டும் ஆளும் கட்சியுடன் ஒட்டிக்கொள்ளவிரும்பும் கருணா மறைமுகமாக மஹிந்த ராஐபக்சவுக்கும் செய்தி ஒன்றை விடுக்கின்றமை தெளிவாக தெரிகின்றது.
செவ்வி முழுவதும் தன்னையும் போராட்டத்தையும் இணைத்து பேசும் கருணா தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் இழைத்த துரோகத்திற்கு தனக்கு தானே எதுவித பெயரும் சூட்டிக்கொள்ளலாம் ஆயினும் தமிழ் மக்களின் பார்வையில் கருணா ஒரு பச்சைத்துரோகிய தவிர போர் வீரன் என்று சொல்வதற்கு இல்லை.
என்றென்றும் மாவீரர்கள் தியாகம் நிலைத்திருக்கும். தாயகம் மலரும். கனவு நனவாகும்
விசேட அணி
தமிழீழ விடுதலைப்புலிகள்.
ATT_1440943499197_karuna_001ATT_1440943499197_karuna_002

No comments:

Post a Comment