August 7, 2015

தமிழ்த் தேசிய போராட்டத்தை வைத்து போலித்தனமாக யாரும் தமது தமது உழைப்பை செய்ய கூடாது என்பதே எமது நோக்கம் -தீபத்தின் பொய்முகம் கிழிகிறது(படங்கள் இணைப்பு)

கடந்த காலங்களில் தீபம் தொலைக்காட்சி நிறுவனம் தன்னை ஒரு தேசிய ஊடகமாக அடையாளப்படுத்தி வந்து , புலம்பெயர் தேசிய கட்டமைபுகளின்
ஆதரவையும் நாடி நின்று- பெற்றுக்கொண்டது .தென்ஆப்ரிக்காவோடு உலகத் தமிழர் பேரவை எனும் தனிநபர் அமைப்பு நடாத்தி வந்த ரகசிய சந்திப்புகளையும் அத்தோடு விலைபோன அரசியலையும் மூடிமறைபதுக்கான அவ் அமைப்பின் தனிநபர்களான சுரேன் மற்றும் கலாநிதி ரமணன் அவர்களுக்கும் அத்தோடு அவர்களின் ஏகோபித்த பிரதிநிதியான சுமந்திரன் அவர்களுக்கும் மாறி மாறி நிகழ்ச்சி கொடுத்து ஊடக தர்மத்தையும் தாண்டி தமிழ்த் தேசிய அரசியலுக்கு துரோகம் செய்தது .
இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அறிவித்ததோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் துரோக அரசியலுக்கு பிரச்சார பிரிவாக தீபம் நிறுவனம் தாயகத்திலும் தனது விரிவாக்கத்தை செய்து அங்கும் கடந்த இரண்டு கிழமைகளுக்கு முன்னர் முதல் தடவையாக தீபம் பத்திரிகையை வெளியிட்டு இருந்தது . தீபத்தின் முதுகில் குத்திய இச் செயற்பாட்டை அறிந்த புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கடும் கோபத்துக்குள் உள்ளாகினர் . தீபம் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சிவா.. அவர்கள் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர் .
தீபம் நிறுவனத்தின் உரிமையாளர் இச் செயற்பாட்டையும் மூடிமறைக்க மீண்டும் பொய்க்கு மேல் பொய் சொல்லி தம்மை நியாயப்படுத்த முயற்சி எடுத்தனர் . தற்சமையம் மீண்டும் தீபம் பத்திரிக்கை மூன்றாவது தடவையாக சுமந்திரனுக்கும் , தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கேவலமான அரசியலுக்கும் மட்டும் அல்லாது ஐக்கிய தேசிய கட்சிக்கும் தனது விளம்பரத்தை செய்து வருகின்றது . கட்டண விளம்பரம் என்றும் போலித்தனமாக பதிவு செய்திருக்கின்றது .
தீபத்தின் போலி முகம் கிழிகிறது . இச் செய்தி குறிப்பு வெறுமனே தீபம் மீது விமர்சனம் வைப்பதுக்கு இல்லை மாறாக தமிழ்த் தேசிய போராட்டத்தை வைத்து போலித்தனமாக யாரும் தமது தமது உழைப்பை செய்ய கூடாது என்பதே எமது நோக்கம் .dcp257676767676 (1)dcp257676767676 (3)dcp257676767676 (4)
மலரவன்

No comments:

Post a Comment