August 17, 2015

சமூக இணைவிற்கான இராப்போசன மாலை சிறப்பாக இடம்பெற்றது – சுவிஸ் ஈழத்தமிழரவை!

சுவிஸ் நாட்டின் தேசிய பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் Oktober மாதம் இடம்பெறவுள்ளதுஇத் தேர்தலில்டர்சிக்கா கிருஸ்னானந்தம் (பொருளியல் நிபுனர், தூண் நகர சொசலிச சனநாயகக் கட்சி (SP) உறுப்பினர்,
தூண்நகராட்சியின் பிரதிநிதி மற்றும் சமூக இணைவாக்கத்துறையின் அங்கத்தவர்) அவர்கள் 2015 ஆம் ஆண்டிற்கானநாடளுமன்றத் தேர்தலில்; பேர்ண் மாநிலத்தில் சொசலிச சனநாயகக் கட்சியின் (SP) சார்பாக போட்டியிடுகிறார்.

சுவிஸ் ஈழத்தமிழரவையில் அங்கம் வகிக்கும் டர்சிக்கா கிருஸ்னானந்தம்; அவர்களின் அரசியல் ரீதியான குறுக்கோள்கள்: சமவாய்;பு – சமஉரிமை – காலாச்சார குடும்ப மற்றும் கல்விவழ ஊக்குவிப்பு – மனிதஉரிமை போன்றவையாகும். அத்துடன் தமிழீழ மக்களின் அவலங்களையும் நன்கறிந்து அவர்களுக்காக குரல்கொடுப்பதில் அதிக அக்கறையுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மனிநேயமுள்ள மக்களின் குரலாகவும், ஈழத்தமிழர்களின் குரலாகவும் சுவிஸ் அரசியலில் கால்பதித்துள்ள டர்சிக்கா கிருஸ்னானந்தம்; அவர்களிற்கு சுவிஸ் வாழ் தமிழ்பேசும் மக்களின் சனனாயகக் குரலான சுவிஸ் ஈழத்தமிழரவை தனது தார்மீக ஆதரவை வழங்கும் பொருட்டு இராப்போசன நிகழ்வொன்றை நடாத்தியிருந்தது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக Margret Kiener Nellen: தேசிய நாடளுமன்ற உறுப்பினர் (SP)  மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி, Anna Annor: சுவிஸ் ஈழத்தமிழரவையின் உபதலைவர் மற்றும் பன்மொழி மொழிபெயர்ப்பு நிபுணர், Mathuran Poopalapillaiதேசிய நாடாளுமன்ற வேட்பாளர் (Grünliberale Partei) மற்றும் பொருளியல் துறை மாணவர் Universität St. Gallen (HSG) பல்கழைக்கழகம், Sabina Stör: Interlaken மாநில நகரசபை உறுப்பினர் மற்றும் சமூகவியல் பட்டதாரி, Bashkim Rexhepi: Bern மாநிலத்தின் மேற்பிராந்திய தொழிளாலர் ஒன்றிய செயற்பாட்டாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து டர்சிக்கா கிருஸ்னானந்தம்; அவர்கள் தனது அரசியல் நோக்கம் சார்ந்து அனைவருக்கும் விளக்கமளித்ததுடன் சமூக இணைவாக்கமும் வெளிநாட்டவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் என்ற தொனியில் கருத்தரங்கமும், கேள்வி பதில்களும் இடம்பெற்றது.
டர்சிக்கா கிருஸ்னானந்தம்; அவர்களின் அரசியல் பிரவேசத்தின் முக்கியத்தை வலியுறுத்தி தம்பிப்பிள்ளை நமச்சிவாயம் (Lausanne நகரசபை உறுப்பினர், சுவிஸ் ஈழத்தமிழரவையின் பிரதிநிதி) மற்றும் றமணதாஸ் சததியநாதன் (பல்துறைசார் ஈழத்தமிர் கலைஞனும்திரைப்பட இயக்குணர்) ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வுக்கு எழில் ஊட்டும் விதமாக பிரபல நடன ஆசிரியை டயானி அவர்களின் அபிநயங்களும் இடம்பெற்றது.
றமீனா பாலசுந்தரம் (ஈழத்து கலைஞர்) மற்றும் தமா வாகீசன் ஆகியோர் நிகழ்வை தொகுத்து வழங்கினார்கள்.
ஊடக வெளியீட்டுக்காக
சுவிஸ் ஈழத்தமிழரவை20150815_184341IMG-20150816-WA0000

No comments:

Post a Comment