August 2, 2015

கிளிநொச்சி மாவட்டத்தில் 807 குடும்பங்கள் மீள்குடியேற வேண்டும்!

கிளி­நொச்சி மாவட்­டத்தில் இது­வரை 807 வரை­யான குடும்­பங்கள் மீள்­கு­டி­யேற வேண்­டி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.கிளி­நொச்சி மாவட்­டத்தில்
கடந்த யுத்­தத்தின் பின்­ன­ரான மீள்­கு­டி­ய­மர்வு நட­வ­டிக்­கைகள் கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பம் மாதம் முதல் ஆரம்­பிக்­கப்­பட்டு தற்­போது நாற்­ப­தா­யி­ரத்து 880 தமிழ் குடும்­பங்­களும் 709 முஸ்லிம் குடும்­பங்­களும் 24 பெரும்­பான்­மை­யின சிங்­களக் குடும்­பங்­களும் என நாற்­பத்து ஓரா­யி­ரத்து 613 வரை­யான குடும்­பங்கள் மீள்­கு­டி­யே­றி­யுள்­ளன என்றும்,கரைச்சி பிர­தேச செயலர் பிரிவில் 181 குடும்­பங்­களும் கண்­டா­வளைப் பிர­தேச செயலர் பிரிவில் 27 குடும்­பங்­களும் பூந­கரி பிர­தேச செயலர் பிரிவில் 342 குடும்­பங்­களும் பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செயலர் பிரிவில் 257 குடும்­பங்­களும் என 807குடும்­பங்கள் மீள்­கு­டி­யேற வேண்­டி­யுள்­ள­தாக மாவட்ட செயலக புள்ளி விப­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.கரைச்­சிப்­பி­ர­தே­சத்தில் இரா­ணு­வத்­தினர் கடற்­ப­டை­யினர், பொலி­சாரின் பயன்­பா­டு­களில் இருப்பதனாலும் மக்கள் மீள்குடியேற முடியாது இருப்பதுடன் பளைப்பிரதேச செயலர் பிரிவில் 257 குடும்பங்கள் வெடிபொருள் அகற்றுவதில் உள்ள தாமதத்தினாலும் மீள்குடியேற முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment