August 2, 2015

யாழ்.ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சிவசங்கரின் அலுவலகம் தாக்கப்பட்டது!

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் வைத்தியகலாநிதி சிவசங்கரின் அலுவலகம் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டதாக பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள், அலுவலகத்தின் முன்பாக இருந்த வேட்பாளரின் பெயர்ப் பலகையின் ஒரு பகுதியை எரித்து, பின் அதனைத் தூக்கிச் சென்றதுடன், வேலியில் இருந்த தகரங்களை கழற்றி எறிந்து, அலுவலகத்தில் இருந்த மின்குமிழ்களையும் அடித்து நொறுக்கிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

attcfdffff

No comments:

Post a Comment