யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று காலை 8 மணிக்கு கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் ஆரம்பமாகின.
ஆரம்ப நிகழ்வுகளில் யாழ் .மெதடிஸ் தேவாலயத்தில் விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கல்லூரியின் றொமைன் குக் மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பமாகியது .
நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும் ஒலிம்பிக் வீரருமான கலாநிதி என்.எதிர்வீரசிங்கம் கலந்துகொண்டார்.
கல்லூரியின் நிறுவுநர் முன்னாள் அதிபர் வண. லின்ஸ் அவர்களின் திருவுருச்சிலைக்கான மலர் மாலையை கலாநிதி என்.எதிர்வீரசிங்கம் அணிவித்தார்.
நிறுவுநர் தின நினைவுப் பேருரையை ஓய்வுநிலை நூலகர் க.மணிவாசகர் நிகழ்த்தினார். நிகழ்வில் கல்லூரின் பிரதி அதிபர் உப அதிபர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
கல்லூரியின் 200வது ஆண்டு விழா நிகழ்வுகள் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment