2009ல் முள்ளிவாய்க்காலில் உலக நாடுகள் பலவற்றின் ஆசியோடும் ,ஆதரவோடும் பெரும் இனவழிப்பை மேற்கொண்டு எங்களது விடுதலைப் போராட்டத்துக்கும் பேரிழப்பையும் பெரும் பின்னடைவையும் சிறீலங்கா
அரசாங்கம் ஏற்படுத்தியது. அதன் பின்னர் தாயகத்தில் எங்களது மக்களை திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள்ளும் புலனாய்வாளர்களின் கழுகுப் பார்வைக்குள்ளுமே வைத்திருக்கின்றது. இருந்த போதும் அது வெளித் தெரியா வண்ணம் பார்த்துக் கொள்கின்றது. இந்த நிலையில் புலம் பெயர்ந்த எங்களது மக்களால் மட்டுமே எங்களது விடுதலைக்கான காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியுமென்பதால் புலம் பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடையே குழப்பத்தை திட்டமிட்டு ஏற்படுத்த தமிழர் விரோத சக்திகள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றன.
புலம் பெயர் நிலங்களில் மக்கள் எந்தெந்த ஊடகங்களில் நம்பிக்கை வைத்திருக்கின்றார்களோ அந்த ஊடகங்களை கையகப்படுத்தும் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். அந்த வகையில் அனைத்துலக ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் (ஐ.பி.சி) மற்றும் கனடா CTR போன்ற ஊடகங்களை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்கள். தொலைபேசி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள லிபரா நிறுவனத்தின் கையில் ஐ.பி.சி வானொலி தொலைக்காட்சி என்பன முற்று முழுதாக வந்துள்ளதை அநேகர் அறிவர். அது போல கனடாவில் ரிவி.ஐ தொலைக்காட்சியும் அவர்கள் கையில் வந்துள்ளதாகவே பரவலாகப் பேசப்படுகின்றது. அத்துடன் தமிழ்த் தேசியத்தில் மிகுந்த பற்றுறுதியோடு செயற்பட்டு வந்த CTR வானொலியிலும் அண்மைக் காலத்தில் நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டு புளட் ரமணன் என்பவரும் அந்த வானொலிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவர் நிகழ்ச்சிகளில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் பல கட்டுப்பாடுகள் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு கொண்டு வந்திருப்பதாகவும் அறிய முடிகின்றது.
அங்கு தமிழ்த் தேசிய விடயங்களில் பற்றுறுதியோடு செயற்பட்டு வந்த பல மூத்த ஒலிபரப்பாளர்கள் ஓரங்கட்டப் பட்டுள்ளார்கள். இந்த ரமணன் என்பவர் ஒரு புளட் உறுப்பினர் எனவும் தாயகத்தில் பல காட்டிக் கொடுப்புக்களையும் கூட்டிக் கொடுப்புக்களையும் மேற்கொண்டு தண்டிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்து நாட்டை விட்டு தப்பித்து வந்தவர் எனவும் தெரிய வருகின்றது. இந்த ரமணன் தன்னோடு உதைபந்தாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் காலை துளையிடும் கருவி கொண்டு துளையிட்டவர் என்றும் அறியப் படுகின்றது. அத்தோடு டக்ளஸ் தேவானந்தாவோடு மிகவும் நெருக்கமான உறவுக்குரியவர் என்றும் தெரிய வருகின்றது. தொலைபேசி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள லிபராவின் முக்கியஸ்தர் ஒருவர் அண்மையில் சிறீலங்கா சென்று அப்போது அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்கவை சந்தித்து கொழும்பில் லிபராவின் அலுவலகத்தை திறப்பதற்கான பேச்சுவார்தையில் ஈடுபட்டதாகவும் மண்ணின் மைந்தர்களால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த பெரும் வாத்தகர்கள் புலம் பெயர் நிலங்களில் பல ஊடகங்களை விலைக்கு வாங்கி வருவதும் அந்த மண்ணின் மைந்தர்களால் மிகுந்த கவனத்தோடு அவதானிக்கப் படுகின்றது. லிபராவின் இந்த கைங்கரியங்களுக்கு 2009க்கு முன்னர் தேசிய முகமூடி அணிந்தவர்களும் பணத்துக்காகவும் ஊடக புகழுக்காகவும் விலை போவதையும் தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதியோடு உள்ளவர்களால் அவதானிக்கப் படுகின்றது. இந்தக் கூட்டணியில் தான் ஆகஸ்ட் 8ஆம் 9ஆம் திகதிகளில் கனடாவில் விஜய TV யால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் நடாத்தப்பபட இருக்கின்றது. காட்டிக் கொடுப்புக்களாலும் நம்பிக்கைத் துரோகங்களாலும் கவன ஈனங்களாலும் எங்களது இனம் பெரிய விலை கொடுத்துள்ள வரலாற்றுப் பின்னணியில் எங்கள் மக்கள் எம்மைச் சுற்றி நடைபெறுகின்ற அனைத்து விடயங்களிலும் மிக விழிப்போடு இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இவை அனைத்தையும் தமிழர் வரலாறும் வரலாற்றை உருவாக்கியவாகளும் உற்று நோக்குவார்கள். காலம் கட்டளைகளுக்காய் காத்திருக்கும்.
No comments:
Post a Comment