எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுமந்திரனை தோற்கடிப்பதென அவர் சார்ந்த தமிழரசுக்கட்சி மற்றும் பங்காளிக்கட்சிகள் தீர்க்கமான முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பாக ஆராயும் தமிழரசுக்கட்சியின் முக்கிய புள்ளிகள் கலந்து கொண்ட கூட்டம் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையினில் அண்மையினில் இரகசியமாக நடந்தேறியுள்ளது. தற்போது மாவை சேனாதிராசாவிற்கு ஆதரவு தேடி பிரச்சாரம் செய்து வரும் சீ.வி.கே.சிவஞானம் சந்திப்பினில் கலந்து கொண்டவர்களிற்கு தமது முயற்சிக்கு மாவையின் ஆசீர்வாதம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக வடக்கு முதலமைச்சராக மாவையினை கொண்டுவர சீ.வி.கே.சிவஞானம் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லை. இதனை குழப்பியடித்தவர் சுமந்திரனேயென குற்றஞ்சாட்டிவரும் சீ.வி.கே.சிவஞானம் இனியும் பொறுத்திருக்க முடியாதென தெரிவித்துள்ளார்.
மறுபுறத்தே பங்காளிக்கட்சிகளும் மக்களது எதிர்ப்பினையடுத்து சுமந்திரனுடன் ஒரே மேடையேறுவதில்லையென்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனிடையே சுமந்திரனை புறக்கணிக்கும் வடமராட்சி இளம்தலைமுறையினது தீர்மானத்தையடுத்து கொழும்பு மற்றும் யாழ்.நகரப்பகுதிகளிலிருந்து கூலிக்கு பெருமளவு இளைஞர்கள் தருவிக்கப்பட்டு பிரச்சார நடவடிக்கைகளிற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

No comments:
Post a Comment