July 24, 2015

பெண்கள் பொங்குதமிழ்களாக பங்களிப்பு வழங்கவேண்டும்!

தமிழர்களின் ஜனநாயக போராட்டத்தில் கடந்த காலங்களைப் போல் பெண்களும் பொங்கு தமிழ்களாக எழுந்து காத்திரமான பங்களிப்பு வழங்க வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வன்னி வேட்பாளர் திருமதி ராஜ்குமார் சிவரதி தெரிவித்துள்ளார்.
வவுனியா, முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள  தமிழ் தேசிய மக்கள் முன்னணிமற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸஸ் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,பாதிப்படைந்த வன்னித் தேர்தல் தொகுதியில் ஒரு பெண் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்து வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன்.உண்மையில் கடந்த 60 வருடகாலமாக எமது பெண்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி நலிந்து சிதைவடைந்த நிலையில் அவர்களுக்காக பேசுவதற்கு யாருமற்ற நிலையில் இருக்கின்றார்கள். அது எனது மனதிலே ஆழமாக பதிந்துள்ளது. நாம் பெண்ணியத்திற்கான ஒரு அதிகாரத்தை பெறவேண்டியவர்களாக இருக்கின்றோம். கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெண்களுடன் ஆழமாக பணியாற்றியவள் என்ற வகையில் அவர்களுடைய ஆதங்கம், அபிலாசைகள் எனக்கு தெரியும்.
ஆயிரம் பெண்களை ஒன்றுபடுத்தி இந்த தேசத்திற்காக பொங்குதமிழ்களாக முழங்கச் செய்தோம். வீட்டில் இருந்த பெண்கள் வீதியில் வந்து சாதித்து காட்டினார்கள். இது மட்டுமல்ல, பெண்களாலும் சாதித்து காட்ட முடியும் என்பது எமது கடந்த கால போராட்ட வரலாறு ஒரு சிறந்த தலைமையின் கீழ் அவர்கள் போராடி சாதனை படைத்தார்கள்.  பெண்களுக்கான உரிமைக் குரல் பாராளு மன்றத்திலும் ஒலிக்க வேண்டும்.அரசியல் தீர்வு நோக்கி நகரும் எமது ஜனநாயக அரசியல் போராட்டத்தில் பெண்களும் காத்திரமான பங்களிப்பு வழங்க வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் உரிமைகள் தொடர்பாகவும், சிறந்த ஒரு நிலைப்பாட்டை தோற்றுவிக்க முடியும். இதற்காக பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ஒவ்வொரு பெண்களும் முன்வரவேண்டும்.
பெண்களுக்காக வெறுமனே வீட்டில் இருந்து கதைப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. சட்டங்களை இயற்றும் பாராளுமன்றத்திலும் பெண்கள் குரல் ஒலிக்க வேண்டும். அதற்காக எமது அபிலாசைகளையும், உரிமைகளையும் பெற்றிட சகல பெண்களும், பெண்கள் தொடர்பான அமைப்புக்களும் ஒன்றிணைந்து பெண் பிரதிநிதிகளுக்கு தமது வாக்குகளை வழங்கி பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment