நாங்கள், வட மாகாண சபை வந்தவுடன் பிரச்சினைகள் எல்லாம் தீ்ந்துவிடும் என்று நம்பாதீர்கள் என்று மக்களிற்கு கூறினோம். நானே பல மேடைகளில் கூறியிருக்கின்றேன். ஆனால் பல மக்கள் வடக்கு மாகாண சபையில்
நம்பிக்கை வைத்தார்கள். ஒரு குட்டி ஈழம் வந்துவிட்டதாகவே நம்பினார்கள். அது அவர்களுடைய தவறு என்று நான் கூறமாட்டேன். சிலவேளைகளில் நாங்கள் கூறிய கருத்துக்கள் அப்படியான ஒரு உருவாக்கத்தை உருவாக்கியிருக்கலாம் என புளொட் அமைப்பின் அதலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தாத்தன் தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை(24.07.2015) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,உண்மை நிலமை வட மாகாண சபையைப் பொறுத்தமட்டில் அதற்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள் மத்திய நடுவன் அரசு கட்டுப்படுத்தக்கூடியவிதத்திலே அதாவது சாதாரண ஒரு முதலமைச்சர் நிதியத்தைக்கூட உருவாக்க முடியாத நிலைமைதான் காணப்படுகின்றது.எந்தவித சாயமும் பூசப்படாத ஒரு பெரிய மனிதராக தென்னிலங்கை அரசு பார்க்கும் ஆகவே மாகாணசபை இயங்குவதற்கு அவர்கள் முட்டுக்கட்டை போடமாட்டார்கள் சர்வதேசமும் அவரை எந்தவித சாயமும் பூசப்படாத மனிதராக ஒரு சிறந்த மனிதராகப் பார்த்து அவருக்குத் தேவையான பின்பலத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையிலேதான் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் முதலமைச்சராகக் கொண்டுவரப்பட்டார்.ஆனால் எங்களது துரதிஷ்டவசம் முதல்இருந்த மகிந்த அரசாக இருக்கலாம் தற்போதய அரசாக இருக்கலாம் எந்த அரசும் அவருக்கு ஒத்துளைப்பு கொடுக்காமல் அவரைப் புறந்தள்ளுகின்ற நிலைமையைத்தான் காணுகின்றோம்.
நாங்கள் சமஷ்டி ஆட்சியை வலியுறுத்திய ஒரு தீர்வைத்தான் எதிர்பார்க்கின்றோம். தமிழ் மக்கள் அவர்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கக்கூடிய வகையில் தாங்களே தங்கள் அலுவல்களைப் பார்க்கக்கூடியவகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வை நோக்கிய பார்வையாகத்தான் எங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் சமஷ்டி ஆட்சியை வலியுறுத்திய ஒரு தீர்வைத்தான் எதிர்பார்க்கின்றோம். தமிழ் மக்கள் அவர்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கக்கூடிய வகையில் தாங்களே தங்கள் அலுவல்களைப் பார்க்கக்கூடியவகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வை நோக்கிய பார்வையாகத்தான் எங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment