July 30, 2015

கூட்டமைப்பின் பிரச்சார நடவடிக்கைக்காக சென்றவரைக் கட்டி வைத்த பொதுமக்கள் !

எழுதுமட்டுவாள் விழுவளை அம்மன் கோவில்ப் பகுதியில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பாகப்
போட்டியிடும் அருந்தவபாலனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதற்குச் சென்றவர்கள் அப்பகுதி மக்களால் விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
அத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை மக்கள் மரத்தில் கட்டி வைத்திருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அப்பகுதிக்கு சென்ற விவசாய அமைச்சராக தற்போது உள்ள ஐங்கரநேசன் அப்பகுதி மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தாராம்.
மாகாணசபைத் தேர்தல் முடிந்து விவசாய அமைச்சராக வந்த பின்னர் ஐங்கரநேசன் அப்பகுதிக்குச் சமூகமளிக்கவே இல்லையாம்.
இதனால் ஆத்திரமுற்றிருந்த மக்கள் பிரச்சார நடவடிக்கைக்காகச் சென்ற கூட்டமைப்பினர் தமிழ்த்தேசியம் பேசி உசுப்பேற்ற முற்பட்ட போது அவர்கள் கொதித்தெழுந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களைத் துரத்தி அடித்து தாம் இம் முறை வேறு ஒரு கட்சிக்கே வாக்களிக்கவுள்ளோம் என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதாக அப்பகுதியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment