July 19, 2015

தமிழ் அரசியலில் மாற்றம் வேண்டும் தாயகம்,தேசியம்,சுயநிர்ணயம் என்றகோட்பாட்டைதமதுகொள்கையாகக் கொண்டதமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அகில இலங்கைதமிழ்க் காங்கிரஸ’ கட்சி!

தமிழ் அரசியலில் மாற்றம் வேண்டும்
பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தமதுபிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நாள் நெருங்கிவிட்டது. தமிழ் மக்கள் தமதுதேசியத்தைக் காப்பாற்றவேண்டிகட்டாயத்தில் உள்ளனர். தாயகம்,தேசியம்,சுயநிர்ணயம் என்றகோட்பாட்டைதமதுகொள்கையாகக் கொண்டதமிழ்த்
தேசியக்கூட்டமைப்பின் அகில இலங்கைதமிழ்க் காங்கிரஸ’ கட்சியின் யாழ்ப்பாணவேட்பாளர்கள்; பற்றிசிறுஅறிமுகம்...
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிபொதுச் செயலாளர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மைந்தன். இலங்கையில் முதலாவதுதமிழ் அரசியல் கட்சியானஅகிலஇலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைஉருவாக்கிய ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பேரன். தனதுபாடசாலைக்கல்வியைகொழும்புறோயல் கல்லூரியிலும் சர்வதேசபாடசாலையிலும் சட்டக் கல்வியைலண்டனிலும் மேற்கொண்டவர்.சட்டத்தரணியாகசிலகாலம் கடமையாற்றியவர்.தற்போதுதனதுசட்டத்தொழிலைமுழுமையாகக் கைவிட்டுமுழுநேரஅரசியல் பணியைஆற்றுகின்றார்.
2001 ஆம் ஆண்டுதொடக்கம் 2010 வரைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்றஉறுப்பினராகவும் கடமையாற்றினார். தமிழீழவிடுதலைப்புலிகளின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேசவிவகாரக் குழுவின் உபதலைவராகச் செயற்பட்டார். மக்களின்; சுயநிர்ணயஉரிமையைப்பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காகஉயரியஅர்ப்பணிப்பைக் கொண்டவர். 2009 மே 18 இற்குப் பின்புதமிழ்த்தேசியக் கூட்டமைப்புதமிழ்த் தேசியஅரசியலைக் கைவிட்டுசரணாகதிஅரசியலுக்குசெல்லும் முடிவினைஎடுத்தபோதுஅதிலிருந்துவெளியேறிதாயகம்,தேசியம்,சுயநிர்ணயம் என்றகொள்கையில் தெளிவாக இருந்தசெல்வராசாகஜேந்திரன்,பத்மினிசிதம்பரநாதன் ஆகியோர் இணைந்துதமிழ்த் தேசியமக்கள் முன்னணியைஉருவாக்கினார்.
செல்வராசாகஜேந்திரன்;
பொதுச் செயலாளர் ,தமிழ்த் தேசியமக்கள் முன்னணி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வியாபாரநிர்வாகமானிபட்டதாரியானசெல்வராசாகஜேந்திரன் வடமராட்சிமண்ணைப்பூர்வீகமாகக் கொண்டவர்,வீரம் நிறைந்தவன்னிமண் இவரைவளர்த்தெடுத்தது.
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதுதாயகம்,தேசியம்,சுயநிர்ணயம் என்பனவற்றைவலியுறுத்திபல்கலைக்கழகசமூகத்தால் பல நூறு மாணவர்கள் பொங்குதமிழ் நிகழ்வைஏற்பாடுசெய்யமுற்பட்டபோதுஅதில் முன்னணிமாணவராகத் திகழ்ந்தார். யாழ்.பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத் தலைவராக இருந்தபோதுதமிழ் மாணவர்களினதுகல்விஉரிமைகள்,தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வேண்டிப் பலபோராட்டங்களைநடத்தினார்.
2004 ஆம் ஆண்டுபல்கலைக்கழகக் கல்விநிறைவடைந்தபின் தமிழீழவிடுதலைப் புலிகளின் தலைமையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டார்.
2004 ஆம் ஆண்டுபாராளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் அதிகூடியவிருப்புவாக்குகளைப் பெற்றுதெரிவானார். 2004 ஆம் ஆண்டுதொடக்கம் 2010 ஆம் ஆண்டுவரைபாராளுமன்றஉறுப்பினராக இருந்தவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரக்குழுவிலும் அங்கம் வகித்தவர்.
2009 ஆம் ஆண்டுமே 18 இற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்துவிலகமுற்பட்டபோதுஅக்கொள்கையில் இறுக்கமாக இருந்த இவரையும் பத்மினிசிதம்பரநாதனையும் கூட்டமைப்பினர் வெளியேற்றியிருந்தனர்.
இதன் பின் இதேஆண்டுகஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்துதமிழ்த் தேசியமக்கள் முன்னணியைஉருவாக்கிஅதன் பொதுச் செயலாளராகக் கடமையாற்றுகின்றார்.
தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் போராட்டங்கள் பலவற்றைஒழுங்குசெய்தவர் இவரேயாவார். ஒரேநேரத்தில் பலபணிகளைப் புரியும் ஆற்றலைக் கொண்டவர்.
விஸ்வலிங்கம் மணிவண்ணன்
சட்டத்தரணி,தேசியஅமைப்பாளர்,ஊடகப் பேச்சாளர்,தமிழ்த் தேசியமக்கள் முன்னணி
விஸ்வலிங்கம் மணிவண்ணன் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புகழ்பூத்தசட்டஅறிஞர்கள் குடும்பத்தில்பிறந்தவர். தந்தை,சகோதரன்,சகோதரிஎனப் பலர் அவரதுகுடும்பத்தில் சட்டத் தொழில் புரிகின்றனர். யாழ்.இந்துக் கல்லூரியில் பாடசாலைக் கல்வியையும் கொழும்புபல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியையும் மேற்கொண்டவர். இன்றுயாழ்ப்hணமாவட்டத்தின் புகழ்பெற்றசட்டத்தரணியாகமிளிர்கின்றார்.
மக்கள் பிரச்சினைகளில் மிகுந்தஅக்கறைகொண்டவர். சுன்னாகம் கழிவுஒயில் விவகாரத்தில் ஏனைய சட்டத்தரணிகளுடன் இணைந்துமக்களுக்காகநீதிமன்றத்தில் வழக்காடியவர். தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தேசியஅமைப்பாளராகவும் ஊடகச் பேச்சாளராகவும் கடமையாற்றுகின்றார்.இலக்கில் தெளிவும்,கொள்கையில் உறுதியும் உடையவர். தமிழ்த்தேசியஅரசியல் நெருக்கடிகளைபுலமைநின்றுபார்க்கும் ஒருசிலரில் இவரும் ஒருவராவார்.
பத்மினிசிதம்பரநாதன்
நாடகமும் அரங்கியலிலும் நாடறியப்பட்ட இவர் பொங்குதமிழால் உலகஅரங்கில் அறியப்பட்டார். முன்னர் பாராளுமன்றஉறுப்பினராகசெயற்பட்டவர். தமிழ்த் தேசியத்தின் மீதானபற்றால் அவரதுஅரசியல் பயணத்தைமுடக்குவதற்குபலர் முயன்றபோதும் அதைக் கண்டுபயந்துபின்நோக்காதுதொடர்ந்தும் தன் பயணத்தைதொடர்கின்றார். பெண்கள்,குழந்தைகள் மீதானஅக்கறையும் அவர்களின்மேம்பாட்டிற்காகஉழைக்கும் பாங்கும் உடையவராகமிளிர்கின்றார்.
ஜெயரட்ணம் வீரசிங்கம்
மானிப்பாயைபிறப்பிடமாகக் கொண்டவர். நவாலிசென்.பீற்றர்ஸ் பாடசாலையில் தனதுஆரம்
பக் கல்வியைகற்றபின் மானிப்பாய் இந்துக் கல்லூரியின்மைந்தன் ஆனார். பல்கலைக்கழகஎழுதுவினைஞரான இவர்பல்கலைக்கழகமாணவர்களின்குறிப்பாகவெளிமாவட்டமாணவர்களின் தங்குமிடவசதியைஏற்படுத்திக் கொடுக்கஅவர் என்றும் உறுதுணையாக இருக்கிறார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டமாணவர்களுக்குநிதிஉதவிகளைவழங்குவதுமட்டுமல்லஅவர்களுக்கானசுயதொழில்வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.சமூகத் தொண்டினால் ஏற்பட்டஆர்வம் காரணமாகதமிழ்
மக்களுக்குசேவைசெய்யவேண்டும் எனஆர்வம் எழுந்தஅதற்குதமிழ்த் தேசியமக்கள் முன்னணிவழிசமைத்தது.
தேவதாசன் சுதர்சன்
குருநகரைபிறப்பிடமாகக் கொண்ட இவர் புனிதபத்திரிசியார் கல்லூரியின் மாணவர்;. குருநகர் பாடுமீன் கழகத்தின் உபதலைவராகத்தன்னைசமூகத்திற்காகப் பணிறாற்றிவரும் ஒருதுடிப்புள்ள இளையவன்.
தன் இனத்தின் அவலங்களைஉணர்ந்துஅதனைத் தீர்க்கஎண்ணங் கொண்டவர். அதற்கானவழியைதேடினார். தமிழ்த்தேசியமக்கள்முன்னணிஅதற்குபொருத்தமானஅரசியல் செயற்பாட்டுஅணிஎன்பதனைதீர்மானித்துஅதனுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
அமிர்தலிங்கம் இராசகுமாரன்
முன்னாள் தலைவர் - யாழ்.பல்கலைக்கழகஆசிரியர் சங்கம்
அமிர்தலிங்கம் இராசகுமாரன் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக்கொண்டவர். யாழ்.பல்கலைக்கழகத்தின் ஆங்கிலமொழித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் இவர் மிகத் துடிப்புள்ளதமிழ்த்
தேசியவாதியாவார். யாழ்.பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவராகஇருந்தபோது முழு பல்கலைக்கழகசமூகத்தையும் இணைத்துபலபோராட்டங்களைமுன்னெடுத்தவர். இதற்காகப் பலதடவைகள் படையினரால் விசாரிக்
கப்பட்டவர். இனப்படுகொலைகளுக்குசர்வதேசவிசாரணைவேண்டும் எனக் கோரிசிவில் சமூகத்தையும் இணைத்து இவர் தலைமையேற்றுநடத்தியபோராட்டம் உலகத்தையேஒருகுலுக்குகுலுக்கியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,தமிழ்த் தேசியஅரசியலைமிகமோசமாகக் கீழிறக்குகின்றது. இந்நிலைதொடர்;ந்தால் முழுத் தமிழினமும் அழியவேண்டியதுதான் என்பதைஅறிவுரீதியாகஉணர்;ந்துதமிழ்த் தேசியமக்கள் முன்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். இவரதுவருகைதமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்குபாரியபலத்தினைத் தந்திருக்கின்றது.
சின்னமணி
கோகிலவாணி
யுத்தத்தின் கோரங்களைதாங்கியபூமியானகிளிநொச்சிமண்ணின் மகள். விடுதலைப் போராட்டத்தில் 14 வருடங்கள் நேரடிப் பங்களிப்புஆற்றியவர். 10 வருடங்களுக்குமேலாகஅரசசார்பற்றநிறுவனத்தில் பணியாற்றியவர். தனதுகிராமமானமருதநகர்மகளிர் குழுவில் இருந்துசேவைஆற்றிவருகின்றார். இதேவேளைஇவர் மனிதஉரிமைசெயற்பாட்டாளராகவும் உள்ளார். சர்வதேசபெண்கள் தலைமைத்துவஒருமாதசெயலமர்விற்காகஅமெரிக்காவிற்குச் சென்றுகற்றவர். உலகலாவியரீதியில் 90 நாடுகளில் இருந்துவருகைதந்தபெண்கள் அக் கற்கைநெறியில் இணைந்து கொண்டனர்.2012ஆம் ஆண்டுநேபாளம் சென்று இன முரண்பாடுகளைமாற்றியமைத்தல்என்றசெயலமர்வில் 3 வாரங்கள் பங்குபற்றினார். அவர்கள் மத்தியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டபெண்களின்நிலையைஎடுத்துக் கூறினார். போர்க்குற்றசாட்சியத்தில் சாட்சியம்அளித்ததுடன் ஏனையவர்களையும் அதில் பங்குபெறவைத்தார்.
ஆனந்திசிவஞானசுந்தரம்
இவர் ஒருகலைப்பட்டதாரி. கலைகள் மிளிரும் அளவெட்டிமண்ணின் சொந்தக்காரி.யாழ்.இராமநாதன் பெண்கள் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றினார். தனதுபாடசாலைமாணவர்களுக்குமட்டுமல்லசமூகத்தில் உள்ள ஏனைய மாணவர்களின் கல்விநடவடிக்கைகளுக்குஉதவுபவராக இருந்திருக்கின்றார். மாணவர்கள் மீதான இவரதுஅக்கறைமக்கள் மீதானஅக்கறையாகபரிணமித்துஅரசியல் ரீதியாகபணியாற்றஆர்வம் கொண்டார்.பல இன்னல்களைஅனுபவித்த இனத்திற்குஒருஒளிகீற்றாய் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிஅமையும் என்றநம்பிக்கையில் அதனுடன் கைகோர்த்துதனதுஅரசியல் தடத்தைமுன்வைத்துள்ளார்.
திருநாவுக்கரசுசிவகுமாரன்
நயினாதீவினைபிறப்பிடமாகக் கொண்டவர்கோப்பாயைதனதுவாழ்விடமாகக் கொண்டயாழ்.
இந்துக் கல்லூரியின் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். தீவகத்தில் நிறைவாகவாழ்ந்தமக்கள் யுத்தத்தினால்சிதறப்பட்டுபல்வேறுபிரதேசங்களில் வாழ்வதால் தீவுகம்; தீயசக்திகளின் ஆளுகைக்குள் உட்பட்டது. எனவேதீவகத்தைமீண்டும் தீபமாக்கவேண்டும் என்றஎண்ணத்துக்குவடிவம் கொடுக்கக் கூடியஒரேஒருஅமைப்பாகதமிழ்த் தேசியமக்கள் முன்னணிஉள்ளதால் அதில் இணைந்துதனதுஅரசியல் பயணத்தைதொடர்கின்றார்.

No comments:

Post a Comment