பருத்திதுறை மத்தியஸ்தர்சபைத் தலைவரும் பிரபல பாடசாலையின் முன்னாள் உப அதிபருமான நடராஜா குணசீலன் பாடசாலை மாணவிகள் 5 பேரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில்
கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் ம.கணேசராசா உத்தரவிட்டுள்ளார். 5 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என பருத்தித்துறை பொலிஸாரால் குற்றச்சாட்டப்பட்டு குணசீலன் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போது, பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னிலையான சட்டத்தரணி யோகநந்தினி , இவ்வாறான சம்பவத்தின் மூலம் மேலும் வித்தியாக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு சந்தேகநபரை விளக்கமறியல் வைப்பது அவசியம் என வாதிட்டார். சந்தேகநபரை பிணையில் விடுமாறு அவரது சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரினார். எனினும் பிணை மனு நிராகரிக்கப்பட்டு சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
வீட்டில் வைத்து ஆங்கிலம் படிப்பித்த குணசீலன் மாணவிகளுக்கு சமச்சீர் என்றால் என்ன என்று விளங்க வைப்பதற்காக அவர்ளைப் படுக்க வைத்து அவர்களது தலையில் இருந்து அந்தரங்கம் வரை கைகளால் தொட்டு படிப்பத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாணவிகளை மடியில் வைத்திருப்பது மற்றும் அந்தரங்கப்பகுதிகளை தொட்டுப் பார்ப்பது என இவர் சில்மிசங்களில் ஈடுபட்டதாகவும் மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment