பம்பலபிட்டியவில் அமைந்துள்ள பெரடைஸ் மஹால் வீட்டுமனைத் தொகுதியின் 6 ஆவது மாடியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. ருஸ்டி ரஜீவ் என்ற 45 வயதான
நபரொருவரின் சடலமே பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக எதிர்வீட்டார் பொலிஸாருக்கும் , அவரது உறவினர்களுக்கும் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து வீட்டினுள் நுழைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த நபர் மதுபானப் போத்தலுடன் கடந்த 16 ஆம் திகதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இக்காட்சி சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது.மேலும் அவர் கடந்த 6 நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் மோசமாக அழுகிய நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment