ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற 54 இலங்கையர்கள் உட்பட 65 பேரை ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்ப அதிலிருந்த ஆள் கடத்தல்காரர்களுக்கு 5 ஆயிரம் டொலர்கள் வழங்கப்பட்டதை இந்தோனேசியா நிரூபித்துள்ளதாக 'சிட்னி மோர்னிங் ஹெரால்ட்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த செய்திக்கு ஆதாரமாக ஆள் கடத்தல்காரர்களுக்கு ஆஸ்திரேலிய அதிகாரகள் வழங்கினர் எனக் கூறப்படும் அமெரிக்க டொலர்கள் அடங்கிய பணத்துடன் இந்தோனேசியாவின் நுஸா டென்காரா திமுர் மாகாணத்தின் பொலிஸ் தலைமை அதிகாரி ஜெனரல் என்ட்டாங் சுன்ஜாயாவின் புகைப்படத்தையும் பிரசுரித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த விடயத்துக்குப் பதில் கூறவேண்டிய நிலையில் இருக்கிறது. அத்துடன் ஆள் கடத்தல்காரர்கள் 6 பேரும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தமக்குப் பணம் தந்ததை ஒத்துக்கொண்டுள்ளனர் என்றும் இந்த செய்தி புனையப்பட்டதல்ல என்றும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment