நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது. பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் நயினை அம்மனைத் தரிச்சிக்கத் திரண்டிருந்தனர். எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துச் சப்பரமும், 27ஆம் திகதி பகல் விசேட கருட சர்ப்ப பூசையும் வாயு பட்சணி நாகம் வீதியுலாவும் இடம்பெறும். 29ஆம் திகதி இரவு சப்பரத் திருவிழாவும், 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. பக்தர்களின் நலன் கருதி விசேட போக்குவரத்துச் சேவை, படகுச்சேவை என்பன ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment