முல்லைத்தீவில் தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களுடைய அத்துமீறகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவ அமைப்புக்கள் போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.;
அரசியல்வாதிகளை நம்புவதை விடுத்து நாம் எம்மை பலப்படுத்தி தொடர்ந்து போரட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டள்ளோம். போரடவும் தயாராக உள்ளோம் என்றும் மீனவ அமைப்புக்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.
தேசிய மீனவர் ஓத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு கப்பல் துறை வீதி கடற்றொழிலாளர் கூட்டுறறவு சங்கத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட மீனவ சங்கப்பிரதிநிதிகளாலேயே இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தெற்கு மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இதற்கு இங்குள்ள அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். அவர்களை இங்கு வரவேண்டாம் என்று கூறவில்லை. பூர்விகமாக அனுமதிக்கப்படட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுபதற்கு நாம் மறுப்பில்லை. ஆனால் மேலதிகமாக வருகைதருவதை தடைசெய்ய வேண்டும்.
மேலும் தடைசெய்யப்பட்ட தொழில் உபகரணங்களை பயன்படுத்தி மீன்படியில் ஈடுபடுகின்றமையால் உள்ளுூர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்திய இழுவைப் படகுகளின் வருகையும் உள்ளுர் தொழிலாளர்களின் தொழில் முறையில் நெருக்கடிக்கை ஏற்படுத்துகின்றது என்றும் குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
முள்ளிவாய்கால் தொடங்கி வட்டுவாகல் வரைக்குமான பலமைல்கள் தூரத்தை கடற்படையினர் தமது ஆக்கிரமிப்பின் கீழ் வைத்துள்ளனர். இதனாலும் முல்லை மாவட்ட மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்களை எதிர் கொள்ளுகின்றனர்.
மீனவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுப்பதற்கு யாரும் இல்லை. ஆரசியல் வதிகளும் வந்து செல்லுகின்றார்களே தவிர ஆக்பூர்வமான எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளுகின்றார்கள் இல்லையெனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment