June 20, 2015

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சிறப்புற நடைபெற்ற கல்வியல் கண்காட்சி!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நேற்று பல்துறைசார் பயிற்சிகளில் ஈடுபடும் ஆசிரிய மாணவர்களால் கலாசாலையில் மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் கண்காட்சி சிறப்புற இடம்பெற்றுள்ளது.
கலாசாலையின் அதிபர் கருணைலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரி பீடாதிபதி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் இக்கண்காட்சியை சென்று பார்வையிட்டு ஆசிரிய மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
ஆசிரிய கலாசாலைக்கு இருக்கின்ற வளப்பற்றாக்குறைகள் தொடர்பாகவும் பா.உறுப்பினர் நிர்வாகிகளிடம் கேட்டறிந்து கொண்டிருந்தார்.
இந்த கண்காட்சி தொடர்பாக கருத்துத்தெரிவித்த கலாசாலையின் பிரதி முதல்வர் லலீசன், இக்கண்காட்சி ஆசிரிய மாணவர்களால் நடாத்தப்படுவது.
தற்பொழுது கற்றுக்கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் கஸ்டப் பிரதேசங்களில் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்கள்.
இந்தக்கண்காட்சி மூலம் பெற்றுக்கொள்கின்ற திறன்விருத்திகள் எதிர்காலத்தில் இவர்களால் கற்பிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு மிகுந்த பயனைத்தரும்.
மாணவர்களை பல்துறைசார்ந்து சிறந்த முறையில் வழிப்படுத்தவும் உதவும் என்றார்.

No comments:

Post a Comment