மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இன்று காலையில் வீசிய காற்றில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்துள்ளதனால் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்று முற்றாக சேதமாகியுள்ளது.
இதன் காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
சில பிரதேசங்களில் மண்சரிவு அபாயங்களும் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வாகன சாரதிகள் மற்றும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment